×
 

அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. கூலி டீசர் வெளியாகும் தேதியை அறிவித்து அட்டகாசம்..!

அனைவரும் எதிர்பார்த்து வந்த ரஜினியின் கூலி பட டீஸருக்குண்டான அப்டேட் கிடைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் படம் என்றால் பிரபல நடிகர்கள் இருப்பது போல், பழைய பாடல்கள் கண்டிப்பாக இருக்கும். முன்பு ட்ரெண்ட் ஆகாத பழைய நினைவு பாடல்களை தற்பொழுது ஒலிக்க செய்து படத்தை மாஸ் காமிப்பார். இப்படி இருக்க மாஸ்டர், விக்ரம், கைதி, லியோ போன்ற படங்களை முன்னணி கதாநாயகர்களை வைத்து இயக்க லோகேஷ், தனது அடுத்த படைப்பை நடிகர் ரஜினியிடம் தொடங்க வேண்டும் என நினைத்தார். 


 ஆதலால், தற்பொழுது தனது கனவை நினைவாக்கி நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தை நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்ப படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளும், போஸ்டர்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத் மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் நிறைவடைந்து உள்ளது. வருகின்ற மார்ச் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் மீதமுள்ள பாடப்பிடிப்பு காட்சிகள் முற்றிலுமாக நிறைவடையும் என்றும் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி அல்லது தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

இதையும் படிங்க: கூலி படத்தில் "பூஜா ஹெக்டே".. அடுத்த அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் வரும் குத்துப்பாட்டிற்கு நடிகை "பூஜா ஹெக்டே" சிறப்பு நடனமாடி இருப்பதாக ரசிகர்கள் அரசல் புரசலாக பேசுவதை புரிந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான "சன் பிக்சர்ஸ்" தனது எக்ஸ் தல பக்கத்தில் கூலி படத்திற்கான முக்கிய அப்டேட் பிப்ரவரி 27 வெளியாகும் என பதிவிட்டு இருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்த நிலையில், கூலி படத்திற்கான அடுத்த அப்டேட் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிப்ரவரி 27ம் தேதி காலை 11 மணியளவில் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டு கூலி படத்தில் "பூஜா ஹெக்டே" தான் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.

இதனை தொடர்ந்து, ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்து காக்க வைக்காதீங்க கூலி பட டீசர் எப்போது வெளியிடுவீர்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு கேட்டு  கொண்டிருந்த நிலையில், இது குறித்த அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகின்ற மார்ச் 14 - ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .

இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக, படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற தகவல் டீசரில் உறுதியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர் .

இதையும் படிங்க: கூலி படத்தில் "பூஜா ஹெக்டே".. அடுத்த அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share