×
 

மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது "எம்.குமரன் s/o மகாலட்சுமி".. குஷியில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...!

நடிகர் ரவி மோகனின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படம் மீண்டும் ரீலீஸ் ஆகிறது..!

தமிழில் ஆண்டு ஒன்றுக்கு பல நடிகர்களை வைத்து பல திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. சிலருக்கு படத்தின் கதை பிடிக்கும், சிலருக்கு படத்தின் கதாநாயகி பிடிக்கும், சிலருக்கு படத்தின் கதாநாயகன் பிடிக்கும், இப்படி ஒவ்வொரு முறை படம் பார்க்க செல்லும் பொழுதும் தனக்கு பிடித்த ஒரு கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

சினிமாதுறையில், ஒருவர் எப்படிப்பட்ட படங்களை வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் இயக்குநர்கள் எடுக்கும் படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டியது தான். ஆதலால் படத்தை இயக்குவதற்கும் தயாரிப்பதற்கும் மிகுந்த கவனத்துடன் அடி எடுத்து வைக்கின்றனர் திரையுலகத்தினர். இப்படி இருக்க, பலரது திரைப்படங்கள் வெளியான நாட்களில் ஓடாமல் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அந்த திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

உதாரணமாக, ஆரம்பத்தில் லாரன்ஸ் நடித்த படங்கள் ஃபெயிலியர் ஆனாலும், சத்யராஜ் நடித்த படங்களும் பெயிலியர் ஆனாலும், அருண் விஜய் நடித்த படங்களும் பெரிய அளவில் ஓடாமல் இருந்தாலும், காலங்கள் மாற... மாற... அவர்களுடைய நடிப்புக்களை பிடித்து போன ரசிகர்கள் இன்று அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். 

இதையும் படிங்க: புஷ்பாவுடன் ஃபையராக வருகிறார் அமரன்... அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரபல நடிகர்..!

அதேபோல், இயக்குநர் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் வந்த பொழுது, அப்படத்தை பார்த்த மக்களுக்கு கதை அன்று புரியவில்லை என்பதால் அப்படம் பிளாப் ஆனது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டாலும், தற்பொழுது இப்படத்தை புரிந்து கொண்டவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எப்பொழுது வெளியிடுவீர்கள் என்று அவ்வப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம் பார்க்க நன்றாக இல்லை கதையும் பெரிதளவில் இல்லை என பலர் கூறினாலும் அப்படம் ஓடிடியில் வெளியான பின்பு, தவறாக நினைத்து விட்டோமே என்று அனைவரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், புதிய படங்களை தயாரிக்க சற்று தயங்கும் தயாரிப்பாளர்கள், 90 மற்றும் 2000 காலங்களில் ஹிட் கொடுத்த அனைத்து படங்களையும் இன்று ரீரிலீஸ் செய்து வருகின்றனர். இதுவரை நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த 'கில்லி' திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னும் சுந்தரா ட்ராவல்ஸ், ஜெயம், ஆட்டோகிராப் முதலிய திரைப்படங்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் ஆடியோ மற்றும் வீடியோக்களை சரி செய்து, சீக்கிரமாக திரையில் காண வழிவகை செய்து கொண்டிருக்கின்றனர் படகுழுவினர். அந்த வரிசையில் நீண்ட நாட்களுக்கு முன்பாக நடிகர் ரவிமோகனின் நடிப்பில் வெளியாகியிருந்த எம்.குமரன் சன்ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகிறது என்ற செய்திகளை அறிந்த ரசிகர்களை உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் அதன் பின் எந்தவிதமான தகவலும் வெளியிடப்படாமல் இருந்த வேலையில், தற்பொழுது இப்படத்திற்கான முழு வேலைகளும் முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 20 ஆண்டுகளுக்கு பின் அனைவரும் எதிர்பார்த்த இத்திரைப்படத்தை வருகின்ற மார்ச் மாதம் 14ஆம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளில் காணலாம் என்ற செய்தியை அறிவித்து உள்ளனர்.

இந்த தகவலை அறிந்து கொண்ட ரசிகர்கள் எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதனை புறம் தள்ளிவிட்டு கண்டிப்பாக இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க செல்வோம் என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தான்.. விஷயம் அறிந்து சண்டைக்கு போன நயன்.. உண்மையை உடைத்த செய்யாறு பாலு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share