×
 

இக்கட்டான சூழ்நிலையிலும் இயக்குநர் சங்கர் போட்ட உருக்கமான பதிவு..! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

பல புகார்கள் மற்றும் சட்ட ரீதியாக பல சிக்கலில் இருக்கும் இயக்குநர் சங்கரின் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் சிவகார்த்திகேயன் போல் மேடையில் "நீங்கள் என்ன தான் எங்கள் வளர்ச்சியை தடுத்தாலும், எங்கள் உழைப்பால் மீண்டும் வளர்ந்து மரமாக நிற்போம்" என சபதம் எடுத்து கண்ணீர் மல்க பேசியிருந்தார். இருப்பினும் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம்  தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் இணைப்பில் தற்போது வெளியாகியுள்ள வெற்றி படமாக மாறி உள்ளது டிராகன். இப்படம் வெளியாகும் முன்பே, பல விமர்சனங்கள், பல ப்ரமோஷன்களை கடந்த நிலையில் இன்று தியேட்டர்களை அதிரவைத்து கொண்டு இருக்கிறது. 

இப்படத்தை பார்த்த பல முன்னணி நடிகர், நடிகைகள் இப்படத்தை குறித்து அதிரடி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் ரசிகர்களும் படத்தை குறித்து நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் நிறுவனர், மற்றும் இயக்குநர் அஷ்வின் மாரிமுத்து ஆகியோர் அடுத்த மூன்று வருடத்தில் எடுக்க போகும் படத்திற்கும், இப்பொழுதே எங்களுக்கு கால் ஷீட் கொடுங்க பிரதீப் என பேட்டியில் கூறி அடுத்த அப்டேட்டையும் கொடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: ராமருக்கு வில்லனாகும் யாஷ்..! கேஜிஎப் முதல் இராமாயணம் வரை.. சும்மா அதிருதுல்ல..!

அதுமட்டுமல்லாமல், நடிகர் சிலம்பரசனின்  51வது படத்தை "ஓ மை கடவுளே" மற்றும் "டிராகன்" படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார் என்று போஸ்டர்கள் வெளியானது. இதனை நினைவு கூர்ந்த ரசிகர்கள், எந்த படமாக இருந்தாலும் பரவாயில்லை அவை அனைத்தையும் தள்ளிவைத்து விட்டு முதலில் அஷ்வத் மாரிமுத்துவின் "காட் ஆஃப் லவ்" படத்தில் நடிங்க, கண்டிப்பாக கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பீங்க என கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், எந்திரன்' திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதனால் கடும் விரக்திக்கு ஆளான சங்கர், அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்று  தெரிவித்துள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் பெரிய பூதாகரத்தை கிளப்பிய நிலையில் அவர் மிகுந்த சோகத்தில் உள்ளார். அதுமட்டும் இல்லாமல்  சங்கர் இயக்கிய படங்களும் தோல்வியில் முடிந்து வருவதால் என்ன செயவது என்று தெரியாமல் இருக்கிறார்.

ஆனால் இந்த சூழலில், டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரை பாராட்டி, அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம். இது போன்ற ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு ஹாட்ஸ் ஆஃப். படத்தில் நடித்த அனைவரும் தனது கதாபாத்திரத்தை அருமையாக நடித்திருந்தனர்.படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. உலகத்திற்கு தேவையான கருத்துக்களை படத்தில் அற்புதமாக இயக்குநர் காட்டியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.    

இதனால் இத்தனை சோதனைகளின் மத்தியிலும் நடிகர் சங்கர் பாராட்டி இருப்பது பெருமைக்குரியது என மக்கள் கூறிவருகின்றனர்.
 

இதையும் படிங்க: தமிழில் ஓடாத "ஆயிரத்தில் ஒருவன்" படம் ரீரிலீஸ்... வெளிநாட்டிலும் திரையிடப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share