சூர்யாவை பாலோ செய்யும் நயன்தாரா... முதலில் அஜித் இப்போ சூர்யா... ஓடிடியிலும் போட்டியா...!
திரையரங்கிற்கு வராமல் நேரடியாக நயன்தாராவின் திரைப்படம் ஓடிடியில் வழியாக உள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் பல பேர் தங்களுடைய வாழ்க்கையை இழந்து, உடமைகளை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து மனம் உடைந்த காலத்தில், சோகத்தின் உச்சியில் இருந்த அனைவரையும் மீண்டும் உற்சாகப்படுத்த வந்த படங்கள் தான் ஒன்று டாக்டர் மற்றொன்று "ஜெய் பீம்". இதுவரை யாரும் பார்த்திராத இருளர் மக்களினுடைய வாழ்க்கையை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம், சந்துரு என்ற உண்மையான வழக்கறிஞரின் கதையாக பார்க்கப்படுகிறது.
இக்கதையை பார்க்கும் பொழுது, இருளான தனது கணவனை கண்டுபிடித்து தரக்கோரி செங்கேணி என்ற பெண் முயற்சிக்கும் அனைத்து முயற்சிகளையும் காண்பிக்கும் திரைப்படமாக இருந்தது. பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வகையில் உண்டாக்கிய இத்திரைப்படத்தில் 'எங்களை அடித்தாலும் உதைத்தாலும் கேட்க யாரும் வர மாட்டீர்களா' என அப்பெண் கதறும் கதறலும், சிலப்பதிகாரத்தை கண்களுக்கு முன்பாக கொண்டு வந்து காண்பிக்கும் அளவிற்கு தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவங்களை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது இந்த ஜெய் பீம் திரைப்படம். இப்படிப்பட்ட இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
இதையும் படிங்க: 'மூக்குத்தி அம்மன்' ஆக ஜொலிக்கும் திவ்யதர்ஷினி...நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய போட்டோ சூட்..!
இதனால் பல தியேட்டர் உரிமையாளர்களின் சாபங்களை வாங்கி குமித்தார் நடிகர் சூர்யா. ஆனாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்ததால் அவர்கள் கொடுத்த வாழ்த்தில் சாபங்கள் எல்லாம் சூர்யாவுக்கு மறைந்து போனது.இப்படி இருக்க இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வரும் வருத்தப்பட்டு இயக்குனரை பாராட்டியதோடு, இருளர்களுக்கு பட்டாவை வழங்கி கவுரவித்தார் அந்த அளவிற்கு இந்த படம் பல மாற்றங்களை கொடுத்தது.
இதேபோல் தமிழகம் மட்டுமல்லாது பேன் இந்தியா 'லேடிஸ் சூப்பர் ஸ்டாராக' வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்பொழுது "டெஸ்ட்" என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் என படக்குழுவினரால் கூறப்பட்டுள்ளது.
இப்படி இருக்க ஜெய் பீம் படத்தைப் போன்று இப்படமும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக netflix நிறுவனத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 4-காம் தேதி 'டெஸ்ட்' திரைப்படம், தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அறிந்த தியேட்டர் உரிமையாளர்கள், இப்படி அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டால் தியேட்டர்களை பூட்டிவிட்டு நாங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியது தான் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமான கோயில் செட்.. சிவப்பு உடையில் நயன்தாரா.. களைகட்டிய மூக்குத்தி அம்மன் பட பூஜை..!