×
 

முரட்டு பார்வை! மூட் அவுட் செய்யும் அழகில் அதிதி ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் பேரழகியாய் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ...

 

தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகையாக அறிமுகமானவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.

2022 ஆம் ஆண்டு, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான 'விருமன்' திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.  இயக்குனர் எம் முத்தையா இயக்கிய இந்த படத்தை, நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதையும் படிங்க: நியூ இயர் ஸ்பெஷல்; ஜொலிக்கும் சேலையில் திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா மேனன்!

முதல் படத்தியிலேயே கிராமத்து கதை களத்தை தேர்வு செய்த நடித்த அதிதி ஷங்கர் வெற்றிப்பட கதாநாயகியாக மகுடம் சூடினார்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' திரைப்படத்தில் நிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது 'நேசிப்பாயா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் இந்த படத்தில், நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை,  ஆகாஷ் முரளியின் மாமனார் சேவியர் பிரிட்டோ தான் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பல படங்கள் பொங்கல் ரிலீஸில்  இணைந்துள்ளதால் இப்படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஒன்ஸ்மோர், என்கிற திரைப்படத்தில் நடித்துள்ள அதிதி ஷங்கர், சூரி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற 'கருடன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கிறார்.

பைரவம் என்கிற பெயரில் தற்போது உருவாகி வரும் இந்த படத்தின் மூலம், தெலுங்கிலும் அதிதி சங்கர் அறிமுகமாக உள்ளார். 

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறி உள்ள அதிதி ஷங்கர், தன்னுடைய முரட்டு அழகில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: 35 வயதிலும் முரட்டு அழகு; பிரியா பவானி ஷங்கரின் கூல் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share