×
 

54 வயதிலும் அம்புட்டு அழகு... யங் ஹீரோயின்ஸை ஓரங்கட்டும் நடிகை குஷ்பு!

தமிழ் சினிமா ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை குஷ்பு 54-வயதிலும், அழகு குறையாமல் ரசிகர்களை பிரமிக்க வைத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டு தமிழ் நாட்டு மருமகளாக மாறியவர் குஷ்பு.
 

1980-ஆம் ஆண்டு வெளியான, 'தி பர்னிங் ட்ரெயின்' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் அறிமுகமாகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: TVK விஜய்..அஜித் Car விபத்து ..வடிவேலு கொடுத்த ஷாக்கிங் பதில் ..!

பின்னர் தமிழில், 1988-ஆம் ஆண்டு வெளியான 'தர்மத்தில் தலைவன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இதன் பின்னர் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக இவர் நடித்த 'வருஷம் 16' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக மாறிய இவர், அடுத்தடுத்து கமல், ரஜினி, ராமராஜன், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

திரையுலகத்தில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் குஷ்பு, தற்போது வரை... அழகு குறையாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய 54 வயதிலும், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, 25 வயது பெண் போல் காட்சியளிக்கிறார்.

தன்னுடைய அழகை மெருகேற்றி கொள்ள உடல் பயிற்சி, வாக்கிங் மற்றும் உணவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர், சிவப்பு நிற புடவையில், கழுத்து நிறைய தங்க நகைகள் அணிந்து குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சட்டை பட்டனை கழட்டி விட்டு கிக்கேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share