ஒரே சிரிப்புல வைரத்துக்கு சொந்தக்காரியான மோனலிசா...! அன்று பாசிமணி விற்ற பெண்.. இன்று இந்தியாவை கலக்கும் செலபிரிட்டி!
கும்பமேளா ஃபேமஸ் அழகி மோனலிசாவுக்கு கேரள நகைக்கடை அதிபர் வைர நெக்லஸை பரிசாக வழங்கினார்
கண் அழகி என்றால் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது நடிகை ஐஸ்வர்யாராய் தான். ஆனால் தற்பொழுது நீங்கள் இணையத்தில் தேடினால் உடனே வருவது என்னமோ, ரசிகர்களால் பிரவுன் பியூட்டி, கண்ணழகி என்று அன்போடு அழைக்கப்படும் மோனலிசா போஸ்லே தான்.
உத்திரபிரதேசம் மகா கும்பமேளாவில் பாசிமணி விற்க வந்த சாதாரண பெண்ணான மோனலிசா, தன்னுடைய கண்களாலும், அழகிய சிரிப்பாலும் அங்கு வந்த அனைவரையும் கவர்ந்து இழுத்தார். இதில் சிலர், அவரை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் கண்ணழகி என பதிவிட, பல இடங்களில் இருந்து மோனலிசாவை காணவும், அவருடன் புகைப்படம் எடுக்கவும் ஒரு பட்டாளமே படையெடுத்து வர ஆரம்பித்தது. பட்டாளம் என்றால் சாதாரண பட்டாளம் அல்ல, அவர் போகும்போதும் வரும்போதும் பாதுகாப்பு கொடுக்கும் அளவிற்கான ரசிகர் பட்டாளம் அவருக்காக கூடியது.
இதையும் படிங்க: இதெல்லாம் வெட்கக்கேடானது... கோபத்தில் கொந்தளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்.!
அதுமட்டுமின்றி மோனலிசாவுக்கு விளம்பரங்கள், பட வாய்ப்புகள் என பல குவிந்து வருவதாக பலர் கூறி கொண்டு இருக்க, திடீரென பாலிவுட் இயக்குனரான சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் மோனலிசா நடிப்பதாக சொல்லி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தார்.
இந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்க, அதைவிட சந்தோஷத்தை ஏற்படுத்தும் வகையில், கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தொழிலதிபர் பாபி செம்மானுரின் நகை கடையை திறந்து வைத்து இருக்கிறார் மோனலிசா. அதுமட்டுமல்லாமல் தனது முக்கியமான கெஸ்ட்டுக்கு வைர நகையை பரிசளித்த பாபி செம்மானுர், அவருடன் ஆடி பாடி அமர்களப்படுத்தி உள்ளார்.
சுமார் 15 லட்சம் செலவில் அழைத்து வரப்பட்ட மோனலிசாவுடன் பலர் புகைப்படம் எடுத்து கொண்டதோடு, அவர் ஆடிய டான்ஸ் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்தது
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய நடிகர் யோகிபாபு.. அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதால் மகிழ்ச்சி..!