×
 

மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

குஷி படத்தின் தோல்விக்கு பிறகு ஓய்வில் உள்ள சமந்தா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஷி படத்தின் தோல்விக்கு பிறகு ஓய்வில் உள்ள சமந்தா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பானா காத்தாடி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான சமந்தா அஞ்சான், கத்தி, திரைப்படங்கள் மூலம் தனி பேன்பேஸை உருவாக்கினார். இவருக்கு தெலுங்கு திரையுலகிலும் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதேநேரம் சமந்தா மையோசிடிஸ் என்ற நோய் பாதிப்புக்கும் ஆளானார். அதில் தொடர் சிகிச்சைகளை பெற்று வந்தார். வெளிநாடுகளிலும் சிகிச்சை எடுத்து வந்தார். பின்னர், வெப் சீரிஸ்களிலும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்த சமந்தா கடைசியாக சாகுந்தலம் மற்றும் குஷி திரைப்படங்களில் நடித்தார்.

இரு படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதற்கிடையே மீண்டும் சிகிச்சைக்கு திரும்பிய சமந்தா, சில காலம் நடிப்பில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். 2 வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்து கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலும் அளித்து வந்தார். 

இதையும் படிங்க: சிகரெட் பிடிக்கும் ஜோதிகா...சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!!

பாலிவுட் பக்கம் திரும்பிய சமட்ந்ஹா சிட்டாடல், வெப்சீரிசில் நடித்தார். இதில் அவருக்கு கவலையான விமர்சனங்கள் வந்தன.  இந்நிலையில் சமந்தா எப்போது ரீ எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான தகவலை கொடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் Maa Inti Bangaram என்ற படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் மூலமாக அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார். சமந்தா தனது சொந்த பேனரில் மா இன்டி பங்கம் (Maa Inti Bangaram) என்ற படத்தை தயாரிக்கிறார். இது மட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழில் கதைகளை கேட்டு வரும் சமந்தா நல்ல கதை கிடைத்தால் நடிப்பதாக முடிவெடுத்துள்ளார். காதல் கதைகளும் சமந்தாவின் சாய்ஸாக உள்ளதாம்.

இதையும் படிங்க: அடுத்த பிரமாண்டம்… கண்ணப்பா படத்தின் டீசரை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share