×
 

சக்தி திருமகனமாக மாறிய விஜய் ஆண்டனி... சிவகார்த்திகேயனுக்காக பராசக்தியை விட்டுக் கொடுத்தாரா?

தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று வெற்றிகரமாக வலம் நடிகர் விஜய் ஆண்டனி. 2005-ல் சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து 2012-ம் ஆண்டு நான் படம் மூலமாக நடிகராகவும் மாறினார் விஜய் ஆண்டனி.

எதிர்மறை பெயர்களை தனது படங்களுக்கு தலைப்பாக வைத்து பொதுமக்களை ஈர்ப்பது விஜய் ஆண்டனியின் பாணி. பிச்சைக்காரன், கொலைகாரன், எமன், சைத்தான் என அவரது படங்களின் தலைப்புகள் பெரும்பாலும் இந்த வரிசையில் தான் இருக்கும்.  ஆனால் தனது 25-வது படத்திற்கு விஜய் ஆண்டனி வைத்திருக்கும் பெயர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அருண் பிரபு இயக்கும் இப்படத்திற்கு சக்தி திருமகன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பராசக்தி என்பதாகும். ஆனால் சிவகார்த்திகேயன் நடித்து சுதா கொங்கரா இயக்கும் படத்திற்கு பராசக்தி என பெயர் சூட்டப்பட்டு சமீபத்தில் அறிவிப்பும் வெளியானது. எனவே விஜய் ஆண்டனியின் இந்த புதிய படத்திற்கு சக்தி திருமகன் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாம். சிவகார்த்திகேயனக்காக பராசக்தி என்ற தலைப்பை விஜய் ஆண்டனி விட்டுக் கொடுத்து விட்டாரா என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஆனால் தெலுங்கில் இப்படத்திற்கு பராசக்தி என்றே பெயர் நீடிக்கிறது. 

இதையும் படிங்க: சாய் அப்யங்கரின் அடுத்த பாடல்.. இந்தமுறை potatoface பெண்ணுடன் ஆட்டம், பாட்டம்...

"புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா
இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா" 

என்ற அடைமொழியோடு தனது சக்தி திருமகன் படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. வருகிற மே மாதம் கோடை விடுமுறையை ஒட்டி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இளையராஜா 2025 ப்ளான்.. அடேங்கப்பா, அசத்தலா இருக்கே...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share