×
 

கோட்-2ம் பாகம் உறுதி... அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகும் தீர்மானத்திற்கு தீ வைத்த விஜய்..!

விஜய் இல்லாமல் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் இரண்டாம் பாகம் எப்படி உருவாகும்? ஆகையால் விஜயின் 70 படம் நிச்சயம் என்கிறார்கள் திரையுலகினர். 

''ஓடுனாதான் நதி. உட்கார்ந்தா பின்னால ஏதோ ஒரு சதி’ என்பதை மூளைக்குள் பிக்ஸ் பண்ணிக் கொண்டு ஓடுவதில் விஜய் ஒரு காட்டுக்குதிரை. விஜய் -69 க்கு பின் யாருடைய காம்பினேஷன் என்பதை கூட இப்பவே தீர்மானித்துவிட்டாராம். அவரது லிஸ்ட்டில் அடுத்து மீண்டும் வெங்கட் பிரபு இருக்கிறார். 69க்கு பிறகு நடிப்பதில்லை முழுவதும் அரசியலில் மட்டுமே என தீர்மானம் போட்டிருந்தவர் அந்தத் தீர்மானத்தை தீயில் போட்டு கொளுத்தி விட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

அரசியலில் இருந்த போதும் தனது தளபதி- 69 படத்தின் பணிகளிலும் பிஸியாக இருக்கிறார் விஜய். அவரது தளபதி- 69 படமே கடை படமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்தப் படம் அவரது வாழ்க்கையின் கடைசிப் படமாக இருக்கும்.பின்னர் அவர் திரைப்படங்களை விட்டுவிட்டு அரசியலில் முழுநேரமாக ஈடுபவார் என்று கூறப்பட்டது. அவர் இப்போதைக்கு திரைப்படங்களை விட்டு வெளியேறப்போவதில்லை என தகவல் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) 2024 ஆம் ஆண்டு ரிலீஸானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதலுக்கு மோசமில்லை. ஆனால், கோட் வெளியாவதற்கு முன்பே, இந்தப் படத்திற்குப் பிறகு, அவர் வேறொரு படத்தில் படத்தில் மட்டுமே நடிப்பார் எனக் கூறப்பட்டது. விஜய் அரசியலில் சேரப் போகிறார், ஆனால் அதற்கு முன்பு அவர் திரைப்படங்களை விட்டு விலகுவார். அவரது கடைசி படம் ஒரு அரசியலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அது தளபதி-69.

இதையும் படிங்க: இது தளபதி பொங்கல்.... "ரூட்" க்ளியர் ஆகிடுச்சு...

இப்போது விஜய் தனது 70வது படத்தில் நடிக்கவும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் அவர் திரைத்துறையை விட்டு வெளியேற மாட்டார் என்றே கூறப்படுகிறது. தளபதி -65, 1000 கோடி வசூலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறார்கள். 


 
விஜய் தனது 70வது படத்திற்கான ஸ்கிரிப்டை எழுத இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளார். வெங்கட் பிரபு தனது கடைசி படமான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படத்தை விஜய்யின் 'மாஸ்டர்', 'லியோ' படங்களை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவே தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம். இது கோட்-2ம் பாகமாக இருக்கும். ஆனால் விஜய் இல்லாமல் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் இரண்டாம் பாகம் எப்படி உருவாகும்? ஆகையால் விஜயின் 70 படம் நிச்சயம் என்கிறார்கள் திரையுலகினர். 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் டேட்டிங்... விஜய் மறைத்த சீக்ரெட்... ஜோடியை பாங்காங் அழைத்துச்சென்ற மேனேஜர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share