×
 

நடிகர் விஷாலுக்கு என்ன ஆனது? வீங்கிய முகம், நடுங்கிய கைகள், உதறிய குரல்.. பதறும் ரசிகர்கள்..

நடிகர் விஷாலின் உடம்புக்கு என்ன என்பதுதான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த அஜித்தின் விடாமுயற்சி கடைசி சமயத்தில் விலகிக் கொண்ட நிலையில் ஏராளமான படங்கள் வரிசைகட்டி வெளிவர ஆரம்பித்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் சுந்தர்.சி இயக்கி விஷால், அஞ்சலி, சந்தானம் ஆகியோர் நடித்துள்ள மதகஜராஜா..  இதில் சிறப்பு என்னவென்றால் 2013-ம் ஆண்டு வெளிவரவேண்டிய படம் 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆவதுதான். 

இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியது படக்குழு. இந்நிகழ்ச்சியில் பேசிய விஷாலின் தோற்றமும், குரலும் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேட்டி, சட்டையில் வந்த விஷாலின் முகம் சற்று வீக்கத்துடன் காணப்பட்டது. முதியவர்கள் அணிவது போன்ற பட்டைநிற கருப்புக் கண்ணாடி போட்டிருந்தார். அவரை பேச அழைத்தபோது தடுமாற்றத்துடன் எழுந்து நின்றார் விஷால்.. 

இதையும் படிங்க: Keerthy Suresh: குட்டை டவுசரில் ஹனிமூன் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் போட்டோஸ்!

மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்த போது, அவரது குரல் உடைந்து நொறுங்கியது போன்று இருந்தது. சொற்களை தெளிவாக உச்சரிக்க முடியாமல் உடைத்து உடைத்தும் நிறுத்தி நிறுத்தியும் அவர் பேசினார். அவ்வாறு பேசிக் கொண்டிருந்தது மைக்கை பிடிக்க முடியாமல் கைகள் உதற ஆரம்பித்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் பதற ஆரம்பித்தனர். பிறகு அவசரம் அவசரமாக நாற்காலி ஒன்று கொண்டு வரப்பட அதில் அமர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார் விஷால்.

வீங்கிய முகத்துடனும், நடுங்கிய கைகளுடனும், உதறும் குரலுடன் விஷால் காட்சி அளிக்கக் காரணம் என்ன என்று எல்லோரும் பேச ஆரம்பித்தனர். நடிகர் விஷாலுக்கு விஷக்காய்ச்சல் என்றும் அதனோடே நிகழ்ச்சியில் பங்கேற்றதாலேயே இவ்வாறு நடந்துள்ளதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது. 

 

1977-ல் பிறந்த நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற வெற்றிப் படங்களை தந்த விஷாலின் நடிப்பில் மார்க் ஆண்டனி, ரத்னம் ஆகிய படங்கள் வெளியாகின. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள நடிகர் விஷால், தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு பேர் போனவர். திருட்டு விசிடி விற்கப்படுவதாக கடைகளில் ரெய்டு நடத்தி சண்டை போட்டவர். நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் செய்த வேலைகள் பெரும் சர்ச்சைகளைக் கூட ஏற்படுத்தியது. அப்படி ஆர்ப்பாட்டமாக செயல்படக்கூடிய விஷால், இப்போது நோயின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கிறாரோ என அவரது ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்.

பொதுவாக குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் முதுமை காலத்தில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்படுவார்கள். அந்த நோயின் அறிகுறிகள் இவ்வாறு தான் இருக்கும். நடிகர் விஷாலுக்கு ஏற்பட்டுள்ளது விஷக்காய்ச்சலா? வேறு ஒன்றா? என விளக்கம் தரவேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share