அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ”குட் பேட் அக்லி” படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 32மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் ”குட் பேட் அக்லி” அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. படத்திற்கு ஜிவி பிரகாஹ்ச் இசையமைக்க படக்கு அடுத்தடுத்த அப்டேட்ஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நேற்று ”குட் பேட் அக்லி” படத்தின் தமிழ் டீசர் இரவு 7.03 மணிக்கு வெளியானது. “ ஏகே ஒரு ரெட் டிராகன். அவன் போட்ட ரூல்ஸ அவனே பிரேக் பண்ணிட்டு வந்து இருக்கானா அவன் மூச்சிலயே முடிச்சிடுவான். நான எவ்வளவு தான் குட்டா இருந்தாலும் இந்த உலம நம்பள பேட் ஆக்குது” போன்ற கூஸ்பம்ப் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸ் காட்டில் அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ... கைதி, விக்ரம் படங்களை டீலில் விட்டாரா இயக்குனர்..?
இந்நிலையில் ”குட் பேட் அக்லி” படத்தின் தமிழ் டீசன் கடண்டெஹ 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இமாலய சாதனையை படைத்துள்ளது. இதை அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பகிர்ந்து, ”குட் பேட் அக்லி” படம் ரெக்கார்ட் பிரேக்கிங் சம்பவம் செய்திருப்பதாகவும், யூடியூபில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று 7 மணியளவில் ”குட் பேட் அக்லி” படத்தின் தெலுங்கு டீசர் ரிலீசாகியுள்ளனர். தெலுங்கு ரசிகர்களும் ”குட் பேட் அக்லி” யை கொண்டாடி வருகின்றனர். விடாமுயற்சியை தொடர்ந்து இந்த படத்திலும் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார்.

முன்னதாக ”குட் பேட் அக்லி” படம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், படத்தில் அஜித் குமாருக்கு மாஸான காட்சிகள் நிறைய உள்ளது. அஜித்தின் ஃபேன் பாயாக இருந்து ஆதிக் ரவிச்சந்திரன் ”குட் பேட் அக்லி” படத்தை இயக்கியுள்ளார். முதல் ஷாட்டில் அஜித்தை நடிக்க வைத்த ஆதிக் ரவிச்சந்திரன், எமோஷ்னலாகி அழுது விட்டார் என கூறினார். மேலும் ”குட் பேட் அக்லி” படம் இதோடு முடிந்து விடாது என்றும், LCU போல் GBU யூனிவெர்ஸ் உருவாகும் என்றும் பேன்பேஸ் கூறி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜிவி பிரகாஷும் அடிக்கடி யுனிவர்ஸ் என்ற வார்த்தையை இந்த படத்தின் புரோமோஷன்களில் பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!