×
 

மோடி அரசில் 27% வீழ்ச்சி! டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவாக ரூ.86.04 ஆக வீழ்ச்சி அடைந்தது, இன்றைய வர்த்தகம் இடையே அது மேலும் சரிந்து ரூ.86.40 என மோசமாகச் சரிந்தது.

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு இந்த அளவு வீழ்ச்சி அடைந்தது இதுதான் வரலாற்றில முதல்முறையாகும். தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம் ஆனால் இதன் பாதிப்பு பொருளாதாரத்திலும், சாமானியர்கள் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டாலருக்கு எதிராக இந்தியாவின் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ஒரு ரூபாயாக இருந்து பின்னர் ரூ.3.30 என சரிந்தது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதிஅமைச்சராக, பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். அதன்பின்புதான் தாராளமாயமாக்கல் மூலம்  உலக சந்தைக்கு இந்தியக் கதவுகள் திறக்கப்பட்டன. அப்போது ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு ரூ.17.01 என இருந்தது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 கொடுத்தால் அமெரிக்காவின் ஒரு டாலரை வாங்கிவிட முடியும். இதுபடிப்படியாகச் சரிந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சிக்குப்பின் 2014ம் ஆண்டு மாறியது. 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.59.44 என இருந்தது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு ஏற்ககுறைய 28 ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடி ஒருமுறை பேசுகையில் “ காங்கிரஸ் கட்சிக்கும், ரூபாய் மதிப்பு சரிவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது, யார் வேகமாக சரிவோம் என்ற கடும் போட்டி நிலவுகிறது” என்று பேசியிருந்தார். 2013ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ரூபாய் அதன் பலத்தை இழக்கவில்லை ஏனென்றால் அதன் அளவு மாறியுள்ளது. டெல்லியில் அமர்ந்திருப்பவர்கள் ஊழல் செய்வதில் பிஸியாக உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். இந்த ட்வீட்களும் அவர்  பேசியதும்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.  மோடி பதவி ஏற்ற 10 ஆண்டுகளில் ரூபாய் இந்திய மதிப்பு 27 % சரிந்துள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலை மாற்றப்படுகிறாரா?... வாய்ப்பு உண்டா?

ரூபாய் மதிப்ப சரிய காரணம் என்ன..?
அந்நியச் செலாவணிச் சந்தையில் எந்த நாட்டின் கரன்சியின் விலையும் அதன் தேவை மற்றும் சப்ளையைப் பொருத்துதான் நிர்ணயி்க்கப்படுகிறது. ஒரு பொருளுக்கான விலை சந்தையில் நிர்ணயிக்கப்படுவதைப் போலத்தான் கரன்சியின் மிதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது உதாரணமாக பொருளுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது, ஆனால் சப்ளை அதிகரிக்காமல் நிலையாக இருக்கிறது என்றால், பொருளுக்கான விலை இயல்பாக அதிகரிக்கத் தொடங்கும்.  மறுபுறம் பொருளுக்கான தேவை குறைந்து கொண்டே வரும்போது, சப்ளை நிலையாக தொடர்ந்தால், போதுமான வாங்குவோர்களைக் கவர்வதற்காக விற்பனையாளர்கள் வேறு வழியின்றி  பொருட்களின் விலையைக் குறைப்பார்கள். 


பொருட்களுக்கான சந்தைக்கும், பாரெக்ட் மார்க்கெட்டுக்கும் இடையிலான வேறுபாடு என்பது, பொருட்களுக்குப் பதிலாக ஒருநாட்டின் கரன்சிக்குப் பதிலாக மற்றொரு நாட்டன் கரன்சிக்கள் அந்நிய செலாவணிச் சந்தையில் மாற்றப்படுகிறது. இந்தியக் கரன்சி மதிப்பு குறைவதற்கான காரணம், சந்தையில் டாலருக்கான தேவை, சப்ளைவிட அதிகரிக்கும்போது மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு குறையும்போது இயல்பாகவே வெளிநாட்டு கரன்சி(டாலர்) மதிப்பு உயரத்தொடங்கும்.  சந்தையில் பொருட்களின் விலை உயரும்போது அல்லது குறையும் போது நம் பணத்தின் வாங்கும் திறன் எவ்வாறு குறைகிறது அல்லது உயர்கிறது என்பதைப் போல ரூபாய் மதிப்பும் குறையும், அல்லது அதிகரிக்கும். அந்நியச் செலவாணிச் சந்தையில் எந்த ஒரு கரன்சியின் தேவை மற்றும் சப்ளையை பல்வேறு காரணிகள் தீர்மாணிக்கும். அதில் முக்கியமானது ஒரு நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி கையாளும் நிதிக்கொள்கை முடிவுகள்.  மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஒரு மத்திய வங்கி(ரிசர்வ் வங்கி) கட்டுபாடுகளற்ற நிதிக் கொள்கையை பின்பற்றினால்கூட சந்தையில் கரன்சியின் சப்ளையை பாதிக்கும், மற்ற கரன்சியின் மதிப்பு உயர காரணமாகிவிடும், உள்நாட்டு கரன்சி மதிப்பு சரியத்தொடங்கும். ரிசர்வ் வங்கி கட்டுப்பாடான பணக்கொள்கையை பின்பற்றினால், கரன்சியின் மதிப்பு பிற நாட்டு கரன்சிகளுக்கு எதிராக அதன்மதிப்பை உயர்த்தும். மற்றொரு முக்கியமான காரணம், கரன்சியின்(ரூபாய்) தேவை. வெளிநாட்டினர் மத்தியில் இந்தியாவின் பொருட்கள், சொத்துக்கள் மீது தேவை இருக்கும் பட்சத்தில் ரூபாய் மதிப்பு உயரும். அதாவது சில வெளிநாட்டினர் முதலில் இந்தியாவில் சொத்துக்கள், பொருட்களை வாங்கும்முன், உள்நாட்டு கரன்சி(ரூபாய்)யை வாங்குவார்கள். அப்போது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள், சொத்துக்களுக்கு கடும் தேவை ஏற்பட்டு, கரன்சிக்கான தேவையும் அதிகரிக்கும், அப்போது கரன்சியின் மதிப்பும் உயரும்.


மாறாக, உள்நாட்டுப் பொருட்கள், சொத்துக்களுக்கு தேவையில்லாத பட்சத்தில் இயல்பாகவே ரூபாய் அல்லது உள்நாட்டு கரன்சியின் மதிப்பு குறையத் தொடங்கும்.
இது மட்டுமல்ல, மக்களின் தேக்கமடைந்த ஊதியம், தனியார் முதலீடு அதிகரிக்காமை, நுகர்வு உயராமல் தேக்கமடைந்திருப்பது, அந்நிய முதலீட்டாளர்ள் இந்தியாவின் நிதிச்சந்தையின் மீது நம்பிக்கையிழத்தல், அந்நிய முதலீடு தொடர்ந்து குறைந்து வருவதல், அல்லது அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து  தொடர்ந்து முதலீட்டை திரும்பப்பெறுதல், ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்தல் ஆகியவற்றாலும் ரூபாய் மதிப்பு சரியும்.


ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி என்ன..?
இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறுவதும், முதலீட்டை எடுப்பதும்தான் டாலர்கள் இந்தியாவிலிருந்து அதிகமாக வெளியேறுகிறது. இதனால் டாலரின் தேவை அதிகரித்து, ரூபாய் மதிப்புக்கு அழுத்தம் ஏற்பட்டு குறைந்து வருகிறது.
அமெரிக்க சந்தை, ஐரோப்பிய சந்தை வலுவடைந்து வருவதால், இந்தியாவில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று அங்கு முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் டாலரின் வெளியேற்றத்தால், ரூபாய் மதிப்பு அழுத்தத்துக்குள்ளாகிறது.

அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைவிட, இந்தியாவில் பணவீக்கத்தின் அளவு அதிகரித்து, பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. இதற்கு காரணம், அமெரிக்க பெடரல் வங்கியைவிட, இந்திய ரிசர்வ் வங்கி கடைபிடிக்கும் கட்டுப்பாடற்ற தளர்வான பணக்கொள்கைதான். 
கச்சா எண்ணெய், தங்கம், ஆகியவற்றை அதிகமாக இந்திய வர்த்தகர்கள், மத்திய அரசு இறக்குமதி செய்வதால், அதிகமான டாலர்களை செலுத்த வேண்டியுள்ளது, அப்போது சந்தையிலும் டாலரின் தேவை இருக்கும்போது, டாலரின் மதிப்பு உயர்கிறது, டாலரை வாங்க அதிகமான ரூபாயை கொடுக்கும்போது, டாலருக்கான தேவை அதிகரித்து மதிப்பு உயர்கிறது, ரூபாய் மதிப்பு சரிகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு எந்தவிதமான ஊக்கமும் அளிக்காமல், நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் டாலரின் இருப்பும், தங்கத்தின் இருப்பும் குறைவதும் ரூபாய் மதிப்பு சரியக் காரணமாகும்.


ரூபாய் மதிப்பு சரிவால் யாருக்கு பாதிப்பு..?
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சமானியர்கள் அனைவரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல்-டீசல் விலை உயரும்போது குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்,  மருந்துகள், தங்கம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் கொண்டவை.

யாருக்கு லாபம்..!
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் பெரும்பகுதியினருக்கு இழப்பும், மிகச்சிலருக்கு மட்டும்தான் லாபமாக இருக்கும். குறிப்பாக ஏற்றுமதியாளர்கள், ஐடி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு சேவையை வழங்கும் நிறுவனங்கள் டாலரின் சம்பாதிக்கம்போது, அதன் மதிப்பு இந்திய ரூபாயில் அதிகரிக்கும்போது அதிகமாக பணம் ஈட்டுவர்.
உதாரணமாக, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.60 ஆக இருக்கும்போது, ஒரு மருந்து நிறுவனம் ஒரு லட்சம் டாலருக்கு ஏற்றுமதி செய்தால், 60 லட்சம் ரூபாய் இந்திய ரூபாயில் கிடைக்கும். இப்போதும் அதே நிறுவனம் ஒரு லட்சம் டாலருக்கு ஏற்றுமதி செய்தால், இந்திய ரூபாயில் அந்த நிறுவனத்துக்கு ரூ.86 லட்சம் கிடைக்கும். ஆக, ரூ.26 லட்சம் லாபமாகும். குறிப்பாக அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்பும்போது பெரிதும் பயனடைவார்கள்.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. உடனடியாக ரிசர்வ் வங்கி தலையிட்டு ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தைரியம் இருக்கு… பேச்சுவார்த்தை நடத்த தைரியம் இல்லையா..?' மோடியின் நாடி நரம்பை உலுக்கும் காங்கிரஸின் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share