இது தான் உங்க இருமொழி கொள்கையா..? பிடிஆர்-ஐ கிழித்தெடுத்த அண்ணாமலை..!
தன் மகன்கள் இரு மொழிக் கொள்கையை பின்பற்றி படித்ததாக கூறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜானுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய பாஜக அரசிற்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இருமொழி கொள்கை விவகாரம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. எப்படியாவது மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது மத்திய அரசு.
ஆனால் திராவிட அரசின் இருமொழிக் கொள்கை மூலம் பல்வேறு உயரங்களை எட்டியிருக்கிறோம். எங்கள் மாணவர்கள் உயர்கல்வியில், வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: அறிவு இருந்தா மும்மொழிக் கொள்கையை ஏத்துக்க மாட்டாங்க..! அமைச்சர் பிடிஆர் ஓபன் டாக்..!
அமைச்சர்கள், திமுக தலைவர்களின் வீட்டு பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதாக சுட்டிக் காட்டிய அண்ணாமலை, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில், பழனிவேல் தியாகராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.பிடிஆரின் மகன்கள் இருமொழிக் கல்வியை கற்றார்களா? என அண்ணாமலை கேள்வி எழுப்ப, பள்ளிக் கல்வியில் இரண்டு மொழிகள் தான் கற்றனர் என்று அமைச்சர் பதிலளித்தார்.
இந்நிலையில் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அண்ணாமலை பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது இரண்டு மகன்களும் இரு மொழிக் கொள்கையில் தான் படித்தார்கள் என பழனிவேல் தியாகராஜன் கூறுவதாகவும் அவருடைய இரண்டு மகன்களும் கற்ற இரண்டு மொழிகள் என்பது ஆங்கிலம் பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ். இதுதான் உங்கள் இருமொழிக் கொள்கையா என கேள்வி எழுப்பி உள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் இதைத் தான் சொல்கிறோம்.தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசு பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்குகிறோம் என தெரிவித்தார்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இரண்டு மகன்களும் வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை நமது அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிடிஆர்-ஐ புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!