×
 

தனுஷுக்கு நான் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்.. மௌனம் கலைத்த செல்வராகவன்!!

தனுஷ் குறித்து செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷின் சகோதரர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமனார். துள்ளுவதோ இளமை படத்துக்கு பிறகு தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கினார். அதில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். இந்தப் படம்தான் தனுஷுக்கும், செல்வராகவனுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

அதை தொடர்ந்து செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன பல படங்களை இயக்கினார். இந்த அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதற்கிடையே சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அந்தத் திருமண முறிவுக்கு பிறகு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமண்ம செய்துகொண்டார். பின்னர் சில படங்களில் இவர் நடிக்கவும் தொடங்கினார். 

சாணிக்காயிதம், பீஸ்ட், பகாசூரன், ராயன் என வரிசையாக நடித்தார். அவரது நடிப்பு மக்கள் மனதில் இடம்பிடித்தது. இதனிடையே தனுஷ் கதை எழுதி உருவான நானே வருவேன் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம், மென்டல் மனதில் உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனுஷ் குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், தனுஷின் வளர்ச்சியை பார்க்கும்போது ஒரு தனி மனிதனாக பெரிய மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இருக்கிறது. தோற்றங்கள் எப்போதும் ஒருவருக்கு முக்கியமில்லை என்பதும் எனக்கு புரிகிறது. உழைப்பும், திறமையும், கற்பனையும் இருந்தால் ஒவ்வொருவரும் தனுஷ் ஆகலாம் என்பதும் பலருக்கு புலப்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். தனுஷ் ஒல்லியாக இருக்கிறார் என்று கிண்டலடிக்கிறார்கள்.

இதையும் படிங்க: சூடுப்பிடிக்கும் கதிரேசன் - தனுஷ் வழக்கு.. இட்லி கடை படத்திற்கு சிக்கலா?

ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையானவர்கள் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள். அவர் வறுமையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் நான் குண்டாக இருக்கிறேன். காதல் கொண்டேன் படத்தை நான் இயக்கிய சமயத்தில் எல்லாம் ரொம்பவே ஒல்லியாகத்தான் இருந்தேன். கண்ணம்மாபேட்டை, தி.நகரில் இருக்கக்கூடிய ஒரு சாதாரண பையனும் ஹீரோவாகலாம், இயக்குநராகலாம் என்பதை தனுஷ் நிரூபித்திருக்கிறார்.

ஹீரோவோ, இயக்குநரோ யாருக்காகவோ எழுதி வைக்கப்பட்ட தனி சொத்து கிடையாது. சினிமாவுக்கு வர நினைப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அதாவது நீங்கள் உங்களுடைய தோற்றத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். முதலில் உங்களை நீங்களே நம்ப வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும்.

சினிமாவில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்பதை இத்தனை வருட அனுபவத்தில் புரிந்துகொண்டேன். தனது வளர்ச்சிக்கு செல்வராகவன்தான் காரணம் என்று தனுஷ் இப்போதும் சொல்கிறார். அதேபோல் வீட்டில் அவர் எப்படி இருப்பார் என்றும் சிலர் கேட்பார்கள்.

நானும் அவரும் வீட்டில் இருக்கும்போது சினிமா பற்றியெல்லாம் பேசிக்கொள்ளவே மாட்டோம். சாதாரண ஒரு அண்ணன் தம்பி எப்படி இருப்பார்களோ அப்படித்தான் இருப்போம். வாடா, போடா என்றுதான் பேசிக்கொள்வோம். தனுஷ் மட்டுமில்லை என்னுடைய சகோதரிகளுடனும் நான் நெருக்கமாகத்தான் இருப்பேன்.

அவரது குடும்பங்களோடும் க்ளோஸாகத்தான் இருப்பேன். அதற்கு காரணம் சிறு வயதில் நாங்கள் ஒரே கூட்டில் புழுங்கி புழுங்கித்தான் வளர்ந்தோம், இருந்தோம். தனுஷுக்கு நான் எதாவது கொடுக்க வேண்டும் என்று சூழ்நிலை வந்தால் என்னுடைய தம்பிக்குத்தானே நான் கொடுக்கிறேன் என்று ஆனந்தம்தான் வரும்.

நான் மட்டும் அதுமாதிரி இல்லை. என்னுடைய சகோதரிகளும் தனுஷுக்காக கொடுக்க வேண்டும் என்றால் ஆனந்தம் மட்டும்தான் பொங்கி எழும். ஏனெனில் நாங்கள் அப்படித்தான் வளர்ந்தோம். அதுதான் எங்களை இன்னமும் அப்படியே வைத்திருக்கிறது என்று தெரிவித்தார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: சூடுபிடித்த தனுஷ் கால்ஷீட் விவகாரம்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.16 கோடி கேட்டு கடிதம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share