ஓடிடியில் கலக்கும் மம்மூட்டி மகன்...! பிச்சுக்கிட்டு ஓடும் 'லக்கி பாஸ்கர்'..!
ஸ்டீமிங்கில் தொடர்ந்து 13 வாரங்களைக் கடந்து டாப் டென்னில் இருக்கிறது லக்கி பாஸ்கர் திரைபடம்.
மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பின் திறமை தற்பொழுது, இவரை 'பேன் இந்தியா ஸ்டாராக, மாற்றி உள்ளது. துல்கர் சல்மானின் எதார்த்தமான பேச்சுக்களும் அவருடைய நடிப்பும், தனக்கு ஏற்றார் போல் கதைகளை தேர்ந்தெடுக்கும் பண்பு ஆகியவற்றால் தனக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி இருக்கிறார்.
இப்படி இருக்க பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களின் அன்பைப் பெற்ற துல்கர் சல்மான், தற்போது சீதாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், மீனாட்சி சௌத்திரி உடன் நடித்து வெளியான "லக்கி பாஸ்கர்" திரைப்படம் செம ஹிட் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: "பராசக்தி" அடுத்து "பரமசிவன் பாத்திமா"... நடிகர் விமலின் அடுத்த படத்தின் அப்டேட்..!
1990களில் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, வங்கி ஊழியர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதை குறித்தும், வறுமையில் இருக்கும் தனது குடும்பத்தை மீட்க என்ன செய்தாலும் தவறு இல்லை என்பதை காண்பிக்கும் வகையிலும் அமைந்த இத்திரைப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் ரூ.100 கோடியை கடந்து ஃபாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று வெற்றி படமாக மாறியது.
இந்த படத்தில் துல்கர் சல்மான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், இளைஞர்களை உத்வேகப்படுத்துவதாக இருந்து உள்ளது. அது மட்டுமல்லாமல் ஹர்ஷா மகராவை பற்றியும் அவரது சிந்தனை பற்றியும், அவர் பணம் சம்பாதித்த விதங்களைப் பற்றியும், அவரைப் போல் பணம் சம்பாதிக்க நினைத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கும். கடைசியில் பிரச்சினையில் சிக்கும் போது அதிலிருந்து வெளியே வர பொறுமையுடன் சிந்தித்து, எந்த மாதிரியான சூழ்நிலைகளை கையாள வேண்டும் என்பதையும் இப்படம் மூலம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி லக்கி பாஸ்கர் படம் நெட்பிளீக்சில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் இருந்து netflix "top 10" ட்ரெண்டிங் படங்களில் இடம் பெற்ற "லக்கி பாஸ்கர்" திரைப்படம். தொடர்ச்சியாக 13 வாரங்களையும் கடந்து டாப் 10 இல் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம் என படத்தை தயாரித்த சீராதா என்டர்டைன்மென்ட்ஸ் தனது எக்ஸ் தலத்தின் மூலம் தெரிவித்துள்ளது. அவர் மட்டும் அல்லாது பல பிரபலங்களும் குறிப்பாக நடிகை நயன்தாராவும் பதிவு செய்து உள்ளார்.
பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்த ரசிகர்கள், தொடர்ந்து ஓடிடியிலும் 13 வாரங்களைகடந்து ஹிட் கொடுத்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்களும் படத்தை பலமுறை பார்க்கும் அளவிற்கு உள்ளது என புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் புனித நீராடிய லக்ஷ்மி ராய்..! போஸ்ட் போட்டு பெருமிதம்..!