×
 

விஜய் சேதுபதியுடன் விஜய் மகன் கூட்டணி.... அரசியலில் வாரிசு நுழைகிறதா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் கலந்து கொள்ள இருந்த திருமண நிகழ்ச்சிக்கு, அவருக்கு பதிலாக அவருடைய மகன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் என்று அழைத்ததை விட தளபதி விஜய் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டவர் விஜய். இப்படிப்பட்ட பரிணாமத்தில் இருந்தவர் தற்பொழுது அரசியலிலும் குதித்து, தனக்கென ஒரு அரசியல் பட்டாளத்தையே உருவாக்கி, தலைவர் தளபதி விஜய் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இப்படி இருக்க  நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருப்பதால், சினிமா ரசிகர்கள் சற்று சோகத்தில் தான் இருக்கின்றனர். ஆனாலும் கற்பனை கதாபாத்திரங்களில் தலைவராக வரும் நடிகர் விஜய், இனி நிஜ உலகில் மக்களுக்கு தலைவராக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய் சினிமா துறையில் இருந்து விலகும் நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய், சினிமா துறையில் தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிகர் விஜயின் மகன் படத்தில் நடிக்கப் போகிறார் என அனைவரும் காத்தருந்த நிலையில், தற்பொழுது படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை ஆனால், படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி, லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சந்திப் கிஷன் நடிப்பில் பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய்.இந்த செய்திகள் காட்டு தீயாய் தமிழகம் முழுவதும் பரவ, படத்திற்கான அப்டேட்டை எப்பொழுது தருவார் எனக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

இந்த செய்திகள் ரசிகர்கள் மட்டுமல்லாது, நடிகர் அஜித்தின் காதுகளிலும் விழ, உடனே ஜேசன் சஞ்சய்க்கு  வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமல்லாது லைக்கா ஏதாவது குளறுபடி செய்தாலோ அல்லது தயாரிக்க முன் வராமல் இருந்தாலோ என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று பேசியதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் காரணம் உண்டு எப்படி எனில் ஜேசன் சஞ்சய் தீவிரமான அஜித் ரசிகர் என்பது தான். 

இந்த நிலையில், சேலத்தில் பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே மணியின்,இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பல தலைவர்களும், தொண்டர்களும், பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இதுவரை எந்த வெளி உலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.

இத்திருமண நிகழ்ச்சியில், ஆரம்பத்திலேயே அமர்க்களமாக விஜய் சேதுபதியுடன் எண்ட்ரி கொடுத்த ஜேசன் சஞ்சயை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே விஜய் தான் வந்திருக்கிறார் என முதலில் மகிழ்ச்சி அடைந்தனர்,பிறகு அருகில் வர சற்று குழப்பமடைந்தனர். அந்த நேரத்தில்  ரசிகர்கள் குழப்பத்தில் இருப்பதை புரிந்து கொண்ட விஜய் சேதுபதி, வந்திருப்பது விஜய் அல்ல அவரது மகன் என தெரிவித்து அனைவரது குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜய் வர முடியாத திருமணத்தில் அவரது மகன் கலந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், கட்சிக்கு அடுத்த வாரிசு பிறந்துள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் கத்ரீனா கைஃப்..! அப்போ தமன்னா... இப்ப கத்ரீனா...அடுத்து யாரோ..! இப்படியும் புனித நீராடலாமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share