×
 

100வது நாள் திருமண கொண்டாட்டம்... வசைப்பாடியவர்களையும் வியக்க வைத்த நெப்போலியனின் செயல்..!

காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம் என தனது மகன் மற்றும் மருமகளின் வீடியோவை பகிர்ந்து உள்ளார் நடிகர் நெப்போலியன். தற்பொழுது இந்த வீடியோவால் அவர் மகனுக்கு பலரது வாழ்த்து கிடைத்து வருகிறது. 

முந்தைய திரைப்படங்களில் ரகுவரன், ஆனந்த் பாபு போன்ற வில்லன்கள் மத்தியில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கியவர் நெப்போலியன். இவர் அக்காலத்து பல்வால் தேவன், ஏனெனில் பார்க்க அவ்வளவு கம்பீரமாக இருப்பார், ஆனால் குணத்தில் குழந்தை போன்றவர். அதுமட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கியவர் தான் இவர். ஆனால் திடீரென  திரையுலகத்தை விட்டு விலகி அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆனார்.

பின் அவர் பற்றி எந்த தகவலும் யாருக்கும் தெரியாமல் இருக்க, ஒரு நாள் தனி நபர் ஒருவரின் யூடியூப் சேனலில் அவரது வீடு வாழ்கின்ற இடங்கள் அவரது வாழ்க்கை முறை அனைத்தும் காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்து மகிழ்ந்தவர்கள் அநேகர். இப்படி இருக்க, நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ், தனது 4 வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனை சரி செய்ய பல்வேறு சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்த நெப்போலியன் யாரையும் சந்திக்காமல் இருந்தார்.

இதையும் படிங்க: ரூ. 25 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரம்.. உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு..

இருப்பினும் தனக்கு பின் தன் மகனை பார்த்து கொள்ள, புரிந்து கொள்ள வாழ்க்கை துணை வேண்டும் என நினைத்த நெப்போலியன், கடந்த நவம்பர் மாதத்தில் தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்தி முடித்தார். இதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது இத்திருமணத்தை குறித்து பலர் பாராட்டி இருந்தாலும் சிலர் நெகட்டிவ் ஆகவும் பேசி இருந்தனர். குறிப்பாக எழுந்து நடக்க முடியாத மகனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டார் நெப்போலியன் என்றெல்லாம் கூட பேசினர். ஆனால் நெப்போலியன் குடும்பம் இதனை பற்றி கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், தற்போது நெப்போலியன் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவரது மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் காதலை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. மேலும் அவர் கீழே குறிப்பிடுகையில் "அன்பு நண்பர்களே காதலர்தின வாழ்த்துக்கள். தனுஷ் மற்றும் அக்ஷயா நூறாவது திருமண நாள் கொண்டாட்டம் சிங்கப்பூரில் பிப்ரவரி 14-ம் தேதி அன்று நடந்தது.

உண்மையில் நாங்கள் இதை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆச்சரிய மூட்டும் விதமாக எனது மகனின் நூறாவது திருமண நாள் பிப்ரவரி 14 அன்று வந்தது. இதனை குடும்பத்தோடு கொண்டாடினோம் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு முன்பு நெப்போலியனை பலர் வசைபாடி இருந்தாலும், இந்த வீடியோவை பார்த்த பிறகு  இத்தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 

இதையும் படிங்க: காமக்கொடூரன்… குடிகார இயக்குனரின் பொறியில் சிக்கிய வைரல் அழகி… பேராபத்தில் மோனாலிசா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share