சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளும் ரவி மோகன்... கை வசம் இருக்கும் நிறைய படங்கள்..!
சிவகார்த்திகேயனை தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரவி மோகன்.
ஜெயம் ரவி என்று அழைப்பதை சற்று நிறுத்தி இனி வரும் காலங்களில் ' ரவி மோகன்' என்ற உண்மையான பெயரில் மட்டும் தன்னை அழையுங்கள். அதுவே எனக்கு பிடிக்கும் என்ற இவர், தமிழில் அவருடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். இதனால் தான் ரவி மோகன் என்ற இவரது பெயர் மக்களால் ஜெயம் ரவி என மாறியது. இதனை அடுத்து "எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி" என்ற படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
பல பெண்களின் மனதில் கதாநாயகனாகவும் திகழ்ந்தார், அதற்கு பின் தாஸ், மழை, இதயத் திருடன்,சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன், நினைத்தது யாரோ, நிமிர்ந்து நில், பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மற்றும் அடங்கமாறு இன்னும் பல படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: ராமருக்கு வில்லனாகும் யாஷ்..! கேஜிஎப் முதல் இராமாயணம் வரை.. சும்மா அதிருதுல்ல..!
இவர் தனது மனைவியின் மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு எடுத்து அதற்க்கான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஏறிய ரவிமோகன் நடிகர் வினையை பார்த்து "ப்ரோ ஆசம் ப்ரோ.. ஜில் ப்ரோ.." என்று சொன்ன டயலாக் பலரால் பகிரப்பட்டு வருகிறது . பலரும் விவாகரத்து பெற்றால் கவலையில் இருபார்கள் ஆனால் ரவி மோகன் தற்பொழுது தான் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் என பலராலும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரவி மோகனிடம், உங்களின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என ரசிகர்கள் மற்றும் பத்திக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிபில், ஏ.ஆர்.ரகுமான் இசையில்,சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி முதலானோர் தன்னுடன் நடித்து வெளியாகவுள்ள "ஜீனி" படத்திற்கான அப்டேட் விரைவில் வரும் என்கிறார்.
அதுபோல், பராசக்தி படத்தில் தனது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை செல்வதாக கூறினார்.
தனது 34வது படமான, கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வரும், 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மே மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்பதால் அதற்கான அப்டேட்டும் உங்களுக்கு தெரியவரும் என கூறியுள்ளார்.
மேலும், சில படங்கள் இருப்பதாலும் அதனை இயக்குநர்கள் கூறினால்தான் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார் ரவிமோகன்.
இதையும் படிங்க: ஹனிமூனில் முதல் படம் NEEK... மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்.. உற்சாக மழையில் தனுஷ்..!