தனது மனைவியால் வாடகை வீட்டிற்கு சென்ற ஷாருக்கான்... இப்படி ஒரு நிலைமை இவருக்கா... குமுறும் நெட்டிசன்கள்...!
தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.
நடிகர் ஷாருக்கான் ஹிந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகராகவும் அப்பகுதியின் சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட ஷாருக்கான் தனக்கு பிடித்த ஹீரோ என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று சொல்லி, அவர் நடித்த "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்தில் ரஜினிக்காக 'லுங்கி டான்ஸ்' என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர்.
இப்படி இருக்க, இவரது நடிப்பு ஒருபுறம் ஃபேமஸ் என்றால் இவரது சிக்ஸ் பேக்கும் மறுபுறம் ஃபேமஸ். அவரது பல படங்கள் இன்றும் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உதாரணத்திற்கு சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூயர் போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாது ட்ரெயினில் "நெஞ்சி உச்சி கொட்டி துடிக்குது தையா" என்ற பாடலுக்கு அப்பொழுதே ட்ரெயின் மீது ஏறி பாடி ஆடும் காட்சிகளும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.
இதையும் படிங்க: டிராகன் பட நடிகையின் அடுத்த படம் காதல் மன்னனுடன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
அப்படிப்பட்ட ஷாருக்கான் வைத்து யாராவது தமிழில் மீண்டும் படம் எடுப்பார்களா என்று நம் கண்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது, இதோ நான் இருக்கிறேன் என்று வந்தவர் தான் இயக்குநர் அட்லி. இவர் நடிகர் ஷாருக் கானை வைத்து பிரம்மாண்டமான 'ஃபேன் இந்தியா' படமான "ஜவான்" திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதுவரைக்கும் ஷாருக்கான பல ஆக்சன் படங்களில் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு வித்தியாசத்தையும் கௌரவத்தையும் தேடித்தந்தது.
இந்த சூழலில் அவரது மகன் போதை மருந்து கடத்தல் என்ற வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட, மனம் உடைந்த ஷாருக்கான் தன் மகனை மீட்டெடுக்க படாத பாடுபட்டு வந்தார். நெட்டிசன்களும் அவரைக் குறித்தும் அவரது மகனை குறித்தும் வசைப்பாடி தீர்த்தனர். ஆனால் தன் வாழ்க்கையில் நெகட்டிவிட்டிகளை மட்டுமே பார்த்து வந்த ஷாருக்கானுக்கு, இது ஒன்றும் பெரிய விஷயமாக தோன்றவில்லை.தன் மகனை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி மீட்டெடுத்தார். பல அடிகளை தன் வாழ்க்கையில் பட்டு பல அவமானங்களையும் சந்தித்து இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் ஷாருக்கான் வாடகை வீட்டுக்கு செல்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வசித்து வரும் "மன்னத்" என்ற கட்டிடம் மும்பையில் மிகவும் பிரபலம்..குறிப்பாக அம்பானி வீடு எந்த அளவிற்கு பிரபலமோ அந்த அளவிற்கு ஷாருக்கான் வீடும். ஏற்கனவே ஆறுமாடி இருக்கும் இவரது "மன்னத்" கட்டிடம் மீது இன்னும் இரண்டு கட்டிடங்கள் கட்ட முடிவு செய்த ஷாருக்கானின் மனைவி, சமீபத்தில் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு தேவையான அனுமதி கிடைத்த நிலையில், கட்டிடம் கட்டும் பணி துவங்கி உள்ளது. இதனால் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை ஷாருக்கான் குடும்பம் வாடகை வீட்டில் தங்க முடிவு எடுத்து உள்ளனர்.இந்த சூழலில், மும்பை பாந்த்ராவின் பாலிஹில் பகுதியில் இருக்கும் அப்பார்ட்மெண்டின் நான்கு தளங்களை மாதம் ரூபாய் 24 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து உள்ளார் நடிகர் ஷாருக்கான்.
இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ, மாதம் ரூபாய் பத்தாயிரம் வாடகை கட்ட, படாத பாடுபடுபவர்கள் மத்தியில், மாதம் ரூபாய் 24 லட்சம் வாடகைக்கு ஷாருக் சென்று இருப்பாரானால் அந்த அப்பார்ட்மெண்டில் என்னதான் இருக்குமோ என சந்தேகத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாக சைத்தன்யாவின் புது மனைவி வெளியிட்ட ரகசிய போட்டோ.. அதிர்ச்சியில் உறைய வைத்த அந்த புகைப்படம்..!