×
 

நடிகை சமந்தாவின் புதிய காதலர் பாலிவுட் டைரக்டரா..? வதந்திகளை தூண்டும் வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தாவின் புதிய டேட்டிங் காதலர் பாலிவுட் டைரக்டர் ராஜ் நிதி மோர் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை சமந்தா முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பின் 2021ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா இன்னும் யாரையும் திருமணம் செய்யவில்லை. ஆனால் அவருடைய காதலன் யார் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. 

பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதி மோர் உடன் சமந்தாவின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  'ஹனி பன்னி' இயக்குனரான ராஜ் நிதி மோர் சமீபத்தில் ஒரு நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வருகை தந்திருந்தார். இந்த விழாவில் நடிகை சமந்தா பச்சை நிற உடையில் இருப்பதை காணலாம். சாதாரண உடையில் ராஜும் புகைப்படத்தில் இருக்கிறார். 

இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர்களை வறுத்தெடுக்கும் நடிகைகள்... ஜோதிகாவை தொடர்ந்து ரம்யாவும் குற்றச்சாட்டு..!

ஒரு விளையாட்டு போட்டி தொடர்பாக பல புகைப்படங்களை சமந்தா ரூத் பிரபு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட போது சமந்தாவும் ராஜ் நிதிமோரு டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவத் தொடங்கின.

ஒரு 'கிளிக்'கில் சமந்தா, ராஜ் கைகளை பிடித்துக் கொண்டிருப்பதை காணலாம். இது அவர்களின் டேட்டிங் வதந்திகளுக்கு எண்ணெய் ஓட்டுவது போல் ஆகிவிட்டது

முன்னணி நடிகையான சமந்தா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டில் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் நாக சைதன்யாவும் சோபிதா துளி பாலாவும் கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பாரம்பரிய தெலுங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

நாக சைதன்யாவின்  திருமணத்திற்கு பிறகு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சமூக ஊடகங்களிலும் அதற்கு வெளியேயும் கடுமையான பொது ஆய்வுக்கு உள்ளானது. நடிப்பு விஷயத்தில் சமந்தா ரூத் பிரபு கடைசியாக அமேசான் பிரைம் ஒரிஜினல் சிட்டாடல் 'ஹனி பன்னி'யில் வருண் தவானுடன் இணைந்து நடித்தார்.

பெரிய திரையில் அவர் கடைசியாக விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக குஷி (2023) படத்தில் நடித்தார். ராஜ் - டி கே இரட்டையரான ராஜ் நிதி மோர் சோர் இன் தி சிட்டி, கோகோ வா கான் போன்ற படங்களை இயக்கியதற்காக பிரபலமானவர். ஓ டி டி களில் தி ஃபேமிலி மேன், கன்ஸ் அண்ட் குலாப்ஸ் ,பார்சி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தங்களுக்கு என ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டனர்.

இதையும் படிங்க: தென்னிந்தியா சினிமா இன்றும் மாறவில்லை.. பெண்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ஜோதிகா ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share