×
 

சூடு கிளப்பும் தவெக… இணைந்த அன்றே ஆதவ்-நிர்மலுக்கு முக்கியப்பதவி… காளியம்மாள் இடத்தை தட்டிச்சென்ற யூடியூபர்..!

உங்களுடைய கற்பனைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என கடந்து போனால், விதவிதமாக கதை எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் யூடியூபர் ராஜ்மோகனுக்கு கொள்கைப்பரப்பு செயலாளர் பதவி கொடுக்குக்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பு இது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிதல், தவெகவுக்கு சாதகம், பாதகமான தொகுதிகளின் விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக இருந்து இன்று விஜய் கட்சியில் இணைந்துள்ள  நிர்மல்குமார் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஐடி விங்கிலும் பல கட்சிகளில் பணியாற்றியுள்ளாதால் அதனையும் கூடுதலாக கவனித்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் யூடியூபர் ராஜ்மோகனுக்கு தவெகவில் கொள்கைபரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தவெகவுக்கு ஷாக்… விஜய் கட்சிக்கு வருகிறாரா..? 'பிசிறு' தட்டாமல் உண்மையை விளக்கிய காளியம்மாள்..!


 ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோருடன் காளியம்மாளும் விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இணையும் பட்சத்தில் காளியம்மாளுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்க விஜய் திட்டமிட்டு வைத்திருந்தாந்தாகவும், அவர் கட்சியில் இணைய மறுப்புத் தெரிவித்ததால் அந்தப்பதவியை எதிர்பாராதவிதமாக ராஜ் மோகனுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்  தவெகவில் இணைவது குறித்து வெளியான செய்திகளுக்கு காளியம்மாள் மறுப்பு தெரிவித்து உள்ளார். ''எந்த அனுமானத்தின் அடிப்படையில் அவை கூறப்படுகிறது? தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். ஏதாவது தகவல் இருந்தால் கூறுகிறேன். உங்களுடைய கற்பனைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என கடந்து போனால், விதவிதமாக கதை எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள். சமூக ஊடகமான வலையொலிகளில் கதை சொன்னது போக பத்திரிகைகளும் எழுதத் தொடங்கி விட்டது..'' எனக் கூறி காளியம்மாள் தவெகவில் இணைவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். காளியம்மாளின் இவ்த முடிவை கடைசி நேரத்தில் தெரிந்து கொண்ட விஜய் அடுத்த நிமிடமே அந்தப் பதவி யூடியூபர் ராஜ் மோகனுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து  த.வெ.க.வில் இணைதவர்களுக்கு இணைந்தே பெரும்பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதால்  தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. போன்ற கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் ஒதுங்கியிருப்பவர்கள் த.வெ.க.வில் இணைய படையெடுத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கும் விஜய், கட்சிப் பதவிகளை வாரி வழங்குவார் என்றே சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: விஜயுடன் இணைந்த ஆதவ்: இனி எல்லாமே ஸ்ட்ரெய் டீலிங் தான்..! 2026-ல் தவெகவின் கூட்டணி வியூகம் என்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share