அமித் ஷாவுடன் 15 நிமிட ரகசிய பேச்சுவார்த்தை... EPS டெல்லி விசிட் சீக்ரெட்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சாவை சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சாவை சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று திடீர் என டெல்லி புறப்பட்டுச் சென்றார். அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் டெல்லி விரைந்தனர்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே இந்த பயணம் என கூறப்பட்ட நிலையில், டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை காண வந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். யாரையும் சந்திக்க டெல்லிக்கு வரவில்லை எனக் கூறிய அடுத்த சில மணி நேரங்களிலேயே பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்பி வேலுமணி, தம்பிதுரை, சிவி சண்முகம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையை ஓரம் கட்டிய அமித் ஷா… அதிமுக-வை டீல் செய்ய புதியவர் நியமனம்- இ.பி.எஸ் நிம்மதி..!
அமித் ஷாவுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது, அதுமட்டும் இன்றி மற்ற நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும் அமித் ஷா சுமார் 15 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திப்புக்கு பிறகான அமித்ஷாவின் எக்ஸ்தள பதிவும் அவற்றை உறுதிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். சுமார் 8 மணி நேர இந்த டெல்லி நிகழ்வுகளின் போது எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து மூன்று காரை மாற்றினார். குறிப்பாக டெல்லி விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு இல்லத்திற்கு இன்னோவா காரில் சென்ற அவர் அங்கிருந்து அமித் ஷா இல்லம் செல்ல ஆடி காரை பயன்படுத்தினார். சந்திப்பு முடிந்து வெளிவரும்போது பென்ஸ் ரக காரில் பழனிசாமி வெளியேறினார்.
டெல்லி வரும் தமிழக பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் பயன்படுத்த அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திலேயே வாகனங்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர்களுடனான சந்திப்பை ரகசியம் காத்திட தனியார் வாகனங்களையே பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த வேண்டும்.. எல்லோரும் ஓரணியில் வரலாம்.. அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை கிரீன் சிக்னல்.!!