×
 

‘நெஞ்சம் பதறுகிறது..’ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக- தேமுதிக... திறனற்ற நிலையில் எதிர்கட்சிகள்..?

‘நெஞ்சம் பதறுவதால் நெஞ்சம் பதறுவதாகக் கூறி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவும், தேமுதிகவும் அறிவித்துள்ளன

திமுக ஆட்சியில் நடைபெறும் நிகழ்வுகளை அடுக்கி ‘நெஞ்சம் பதறுவதால் நெஞ்சம் பதறுவதாகக் கூறி  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவும், தேமுதிகவும் அறிவித்துள்ளன. ! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில் தே.மு.தி.க. சார்பில் விஜயபிரபாகரன் அல்லது தே.மு.தி.க. மா.செ. ஒருவர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. 13 மற்றும் 17ம் தேதிகள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தை மாதம் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி... கோவையில் இருந்து அரசியல் யுத்தத்தைத் தொடங்கும் இபிஎஸ்...

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வந்த நிலையில், இந்த முறை தி.மு.க., போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, வேட்பாளராக சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரை தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க. இம்முறை தேர்தலில் கட்டாயம் போட்டியிடும் என்று கூறப்பட்டு வந்தது. அப்படி இல்லாதபட்சத்தில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. 2023ல் நடந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா., போட்டியிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தற்போதைய தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், முன்னாள் தே.மு.தி.க., நிர்வாகி ஆவார். மறைந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துக்கு நெருக்கமான தலைவராகவும் இருந்துள்ளார். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது, தி.மு.க.,வுக்கு கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்களில் அவரும் ஒருவர். தற்போது தி.மு.க.,வில் போட்டியிடும் அவரை பழி தீர்க்க, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

அப்படி தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் விஜய பிரபாகரன் வேட்பாளராக களம் இறங்கவும் வாய்ப்புள்ளதாக, கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் இரு கட்சிகளுமே ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்அதிமுக தேமுதிக வாக்குகள் கண்டிப்பாக பாஜகவுக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , "ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் அதிமுக தேர்தலை புறக்கணிக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால் புறக்கணிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்

.

அதிமுக என்ற கட்சி வெற்றி தோல்வி ஒருபக்கம் இருக்கட்டும். விக்ரவான்டி தேர்தல், ஈரோடு கிழக்கு தேர்தல் இரண்டையும் கைவிட க்காரணம் என்ன? தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் இருக்கிறதா அதிமுக? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக-தேமுதிக போட்டியிடாத பட்சத்தில் பாஜக வேட்பாளரை களமிறக்கி போட்டியிட வைத்தால் இந்த இரு கட்சிகளின் வாக்குகளையும் பாஜகவே அறுவடை செய்யும் நிலை உருவாகி உள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share