முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து காரசார விவாதம்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விவாதிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து க்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: மக்களை திசை திருப்பாதிங்க! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட தமிழிசை.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் மார்ச் 5ஆம் தேதியான இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், நாம் தமிழர் கட்சி, உள்ளி்ட்ட 45 கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.இருப்பினும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.இந்த நிலையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது.
இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் நடைபெறும் இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை, நீட்தேர்வு, மும்மொழிக் கொள்கை, நிதி ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்படுவதுடன் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கபடலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊடகத்தில் வாய்ச்சவடால் விடும் அண்ணாமலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்து பேசட்டும்- முத்தரசன் விளாசல்