எனக்கு அட்வைஸ் பண்ணவங்களோட வாழ்க்கைலாம் இப்போ... மனம் திறந்த டிடி!!
நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமான டிடி கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
விஜய் டிவியில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் டிடி. பிறகு அதே சேனாலில் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து பல ஹிட் நிகழ்ச்சிகளில் டிடி தொகுப்பாளரகா இருந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகிய அவர், சிகிச்சை பெற்றார்.
இவர் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதும் பேட்டிகள் கொடுப்பதும் என இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், நான் ஸ்கூல் காலேஜ் படிக்கும்போதே வேலைக்கு வந்துவிட்டேன். ஸ்கூல் படிக்கும்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் சரியாக என்னால் ஸ்கூல் லைஃபை என்ஜாய் பண்ண முடியவில்லை. அதற்கு பிறகு கல்லூரியில் என்னுடைய நண்பர்களின் உதவியால் படிப்பை சரியாக முடித்தேன்.
இதையும் படிங்க: 'மூக்குத்தி அம்மன்' ஆக ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய போட்டோ சூட்..!
அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பலர் பலவிதமாக அட்வைஸ் கொடுத்தார்கள். அதை நான் என்னுடைய முயற்சியின் படி அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் போது இது செய்தா சரியா வராது, அது செய்தா சரியா வராது என்று நம்மை முடக்கத்தான் பார்த்தார்கள். நான் கூட ஒரு கட்டத்தில் அவர்கள் சொல்வது சரிதானா? அவர்களை எப்படி திருப்தி படுத்தலாம் என்று கூட யோசிக்க வைத்து விட்டார்கள். நம்முடைய செல்ப் கான்ஃபிடன்ட் உடைக்கும் வகையாக தான் அட்வைஸ் என்கிற பெயரில் சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இந்த செல்ப் மோட்டிவ் எல்லாம் ரெண்டு வருஷம் தான் இருக்கும் அதுக்கு பிறகு காணாமல் போய்விடும். அதுக்கு பிறகு உன் நிலைமை என்ன என்ற ஒரு எதிர்காலம் குறித்த பயத்தை எல்லாரும் ஏற்படுத்துவார்கள். ஆனால் இப்போ நம்மை கூறியவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று எட்டிப் பார்த்தால் அதை சொல்லவே முடியாது அந்த அளவிற்கு இருக்கிறது. அதனால் யார் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் நம்முடைய மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அப்படி நம்முடைய பயணத்தை வழிநடத்த வேண்டும் அவ்வளவுதாங்க என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: படையாண்ட மாவீரா படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடல்..!