×
 

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அப்போலோவில் அட்மிட்..! ஜனசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர துணை முதல்வரும்,ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்ற நாள் முதலே தொடர்ந்து ஓய்வின்றி கடுமையாக பயணம் செய்து அரசியல் மற்றும் அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாராம். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கும்பகோணம், ஸ்ரீரங்கம், பழனி திருச்செந்தூர் என ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கேரளாவில் சில கோவில்கள் என இடைவிடாது பயணம் மேற்கொண்டாரம் பவன் கல்யாண்.

அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வு எடுக்காமல் நேரடியாக உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும்  கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். அங்கிருந்து நேராக டெல்லி சென்று புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா மற்றும் என்.டி.ஏ தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் என தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதையும் படிங்க: ஜி.பி.எஸ் தொற்றால் பெண் உயிரிழப்பு - ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு

ஏற்கனவே கடுமையான முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பவன் கல்யாண் தற்போது இரு மாதத்திற்கு மேலாக ஓய்வின்றி கார், விமானம் என தொடர் பயணம் மேற்கொண்டு வந்ததால் முதுகு வலி பல மடங்கு அதிகமாகிப் போனதாம். 

ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் போகவே வேறு வழி இன்றி ஹைதராபாத் ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவமனையான அப்பல்லோவில் இரவு நேரத்தில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் தங்கி சில நாட்கள் நிச்சயம்  ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் சில நாட்கள் அங்கேயே தங்கி சிகிச்சை பெற முடிவெடுத்துள்ளாரம்.

இரவு நேரத்தில் பவன் கல்யாண் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள அவரது தொண்டர்கள் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

இதையும் படிங்க: பெங்களூரு போக்குவரத்து நெருக்கடி பிரச்சனை.. கடவுளை வம்புக்கிழுத்த துணை முதல்வர் சிவகுமார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share