ரோட்டர்டாம் படவிழாவில் விருதுபெற்ற BadGirl
ரோட்டர்டாம் படவிழாவில் விருதுபெற்ற BadGirl
வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். வெற்றிமாறனின் உதவியாளர் வர்ஷா பரத் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானது முதலே பெரும் சர்ச்சைகளையும், விவாதங்களையும் உண்டாக்கியது. குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவராக கதையின் நாயகி சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டாம் படவிழாவில் பேட் கேர்ள் படம் பங்கேற்றது. அதில் ஆசிய திரைப்படங்களை முன்னிலைப்படுத்தும் NETPAC என்ற பிரிவின் கீழ் சிறந்த திரைப்படத்திற்கான விருது பேட்கேர்ள் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த விருது தமிழ் சினிமாவுக்கும், உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கும் கிடைத்த விருது என படக்குழு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.
ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உருவாக்கப்படும் தனித்துவம் மிக்க திரைப்படங்களுக்கு இந்த NETPAC விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒரு இயக்குநரின் முதல் அல்லது 2-வது படங்களை மட்டுமே தேர்வு செய்து இவ்விருதானது வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாடிவாசல் திரைப்படம் குறித்த அட்டகாச அப்டேட்....
NETPAC விருது பெற்றுள்ளதன் மூலம் சர்வதேச திரைமொழியில் தனக்கான இடத்தையும், தமிழ்த் திரையுலகினரின் கதை சொல்லல் திறமையையும் உலகம் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றி சர்வதேச சினிமா சந்தையில் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் பிராந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
அஞ்சலி சிவாரமன், சாந்தி ப்ரியா, ஹ்ரிது ஹரூன், தீஜே அருணாசலம், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ப்ரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, ப்ரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் காஞ்சனா ஆட்டம்.. ராகவா லாரன்ஸ் கொடுத்த புதிய அப்டேட்.. குஷியான ரசிகர்கள்..