×
 

பள்ளி விழாவில் இப்படியா பேசுவது..? பிக்பாஸ் முத்துக்குமரனை கழுவி ஊத்தும் மக்கள்!!

பிக்பாஸ் 8வது சீசன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் பள்ளி விழாவில் பங்கேற்று பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

பிக்பாஸின் 8வது சீசனில் டைட்டில் வின்னர் ஆன முத்துக்குமரன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பிரபல யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராகவும் பட்டிமன்ற நிகழ்ச்சி பேச்சாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்று பேசியது சர்ச்சையாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன், சிறுவயதில் இருந்தே புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேலும் இதன் மூலம் தனது தமிழை வளத்தை பெருக்கிக்கொண்டு பேச்சாளராக உருவெடுத்தார்.

பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பாக பேசி சிறந்த பேச்சாளராக மாறினார். பின்னர் பணிக்காக சென்னை வந்த முத்துக்குமரன், முதலில் வாய்ஸ் ஓவர் ஆர்ட்ஸ்டிட்டாக பயணத்தைத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு நீயா நானா நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு கிடைத்தது. அதில், அசைவம் சாப்பிடுபவர்கள் முரட்டு குணம் கொண்டவர்கள் என லொள்ளு சபா ஜீவா தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் களம் இறங்கும் புதிய தொகுப்பாளர்.. அனல் பறக்க காத்திருக்கும் பிக்பாஸ் 9வது சீசன்.. ஹவ் இஸ் ட்..!

அதற்கு சைவம் சாப்பிட்டால் நல்லவர்கள், அசைவம் சாப்பிட்டால் கெட்டவர்கள் என்று சொல்வது ஒரு பொய்யான உருட்டு. இதை ஏற்க முடியாது என முத்துகுமரன் தெரிவித்ததன் மூலம் மக்களிடைய இவருக்கு ஆதரவும் பெருகியது. இவ்வாறாக தனது திறமையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிரபல யூடியூப் சேனல்களில் தொகுப்பாளரானார். அப்போது தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரது பேச்சு, செயல்கள் மக்களை அதிகம் கவர்ந்தது. மேலும் அவர் அதில் நன்றாக விளையாடி டைட்டிலையும் தட்டி சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரது ரீச் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிலையில் சமீபத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முத்துக்குமரன் பள்ளி மாணவர்கள் முன்பு உறையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பெண்ணின் உடல் வளைவு பற்றி தெரியுமா. இது எப்படிப்பட்ட கேள்வி தெரியுமா, நான் பேசுவது மிகவும் வக்கிரமானதாக தெரியும், ஆனால், பெண்ணின் வளைவு என்பது புன்னகை தான். பெண்ணின் உடலில் புன்னகை அழகாக வளைந்து செல்லும் என பேசியுள்ளார். இப்பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு பள்ளி விழாவில் மாணவர்கள் முன்பு இப்படித்தான் பேசுவதா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: இணையத்தில் சண்டை போட்டுக் கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள்... பிக் பாஸ் முடிந்தும் மக்கள் கொண்டாட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share