×
 

இறுதிக்கட்டத்தை எட்டிய பிக்பாஸ் சீசன் -8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸ் சீசன் - 8 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

24 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 104 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இதனை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் இறுதிப்போட்டி நாளை 19/1/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 

முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயான், விஷால், பவித்ரா ஆகிய 5 பேர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். சீசன் துவக்கத்தில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என்று இரண்டு பிரிவாக இந்த வீடு பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் வீட்டின் நடுவே இருந்த கோடு அழிக்கப்பட்டு ஒரே வீடாக மாற்றப்பட்டது. பள்ளிக்கூட டாஸ்க், ராஜாராணி டாஸ்க், ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க், செங்கல்லா, செங்கல்லா என போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த விதவிதமான போட்டிகள் வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: அருண், தீபக்-க்கு டாடா சொன்ன பிக்பாஸ்.. தர்ஷிகாவின் வருகையால் விஷாலுக்கு நெருக்கடியா?....

உடல் வலிமை, மன வலிமை, நெருக்கடியை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரும் விதமாக போட்டி வடிவமைக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களை மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வீட்டில் இருந்து வெளியேற்றவும், தங்க வைப்பதும் போட்டியின் சாராம்சம். 

அந்தவகையில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் என 13 வாரங்கள் 13 பேர் வெளியேற்றப்பட அடுத்து 2 பேர் என 2 முறை வெளியேற்றப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாக்குலினும் கடைசியில் வெளியேற்றப்பட 5 பேர் இறுதிப்போட்டியில் நிற்கின்றனர். இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு 50 லட்ச ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்படும் மற்றும் விளம்பரதாரரர்கள் தரும் பல்வேறு பரிசுகளும் தரப்பட உள்ளது. 
இதுவரை பதிவான வாக்குகளின் அடிப்படையில் முத்துக்குமரன் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் - 8: TICKET TO FINALE வென்ற ரயான், வெளியேற்றப்பட்ட மஞ்சரி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share