×
 

“கொஞ்சம் பொறுத்தா உங்க குடியா கெட்டுடும்” -  டங்ஸ்டன் போராட்டக்குழுவால் டென்ஷன் ஆன எச்.ராஜா!

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் டங்ஸ்டன் ஏல அறிவிப்பை ரத்து செய்வது ஒன்றிய அரசு காலம் தாழ்த்துவது  மக்களை ஏமாற்றம் செயல் என கேட்ட கேள்விக்கு எச்.ராஜா அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க விடுக்கப்பட்ட ஏலத்தை ஒன்றிய அரசு இன்று ரத்து செய்யும் என காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் சுரங்க ஏலம் ரத்து குறித்து முழுமையாக எந்த தகவலும் கிடைக்காததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட தயாராக இருந்த பொது மக்களுக்கு இந்த முடிவு அதிர்ச்சியை தந்திருந்தாலும் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

டெல்லியில் விவசாயிகள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை டங்ஸ்டன் சுரங்க ரத்து தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பேசியிருந்தார். இது டங்ஸ்டன் போராட்டக்குழுவினரையும், விவசாயிகளையும் பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. 

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகியான எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் காட்டமாக அளித்த பதில் சோசியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: “பரியேறும் பெருமாள்” பட பாணியில் இளைஞருக்கு நேர்ந்த அவலம்;  “அசுரன்” பட தனுஷ் அளவிற்கு அவமானம்! 

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் டங்ஸ்டன் ஏல அறிவிப்பை ரத்து செய்வது ஒன்றிய அரசு காலம் தாழ்த்துவது  மக்களை ஏமாற்றம் செயல் என கேட்ட கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, “மத்திய அமைச்சரை இங்கிருந்து சென்ற குழு சந்தித்துள்ளது இன்னும் 24 மணி நேரம் ஆகவில்லை 24 மணி நேரம் பொறுத்தால் என்ன உங்க குடி கெட்டுவிடுமா” என தனது பாணியில் பேசியுள்ளார். போராட்டக்குழுவினரை அவமதிக்கும் விதமாக எச்.ராஜா பேசியிருப்பதாக சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: மதுரை -தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடப்படவில்லை.. தெற்கு ரயில்வே விளக்கம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share