ஊதிவிட்ட பாஜக... ஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் ட்ரிக்ஸ்: மாஸ்டர் ப்ளான்..!
மத்திய அரசு குறித்து ஸ்டாலின் சொல்வது பொய் என்பதை உடைக்க வேண்டும். அதையும் அவரை வைத்தே உடைக்க வேண்டும் என திட்டமிட்டது.
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 8 மக்களவை தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்படும். தமிழ்நாட்டில் 8 தொகுதிகளை இழந்து 31 மக்களவைத் தொகுதிகளாக குறைக்கப்படும் சூழல் உள்ளது. தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களை வஞ்சித்து வருகிறது. தொகுதிகள் குறைக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.
நாட்டு ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்நாட்டுக்கு பாதிப்புதான் ஏற்படும். நீட், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகள் அனைத்துக்கு எம்.பிக்கள் அதிகளவில் இருந்தால்தான் குரல் கொடுக்க முடியும். மும்மொழி கொள்கை, நீட் பிரச்சனை, நிதி தராத விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் போதிய எம்.பி.க்கள் இருந்தால்தான் முடியும். நீட், நிதி குறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் பதில் இல்லை.
இதையும் படிங்க: முதலமைச்சர், அமைச்சர் படம் எங்கே? திமுக, அதிமுக நிர்வாகிகள் மோதல்.. பூமி பூஜையில் கைகலப்பு..!
ஒன்றிய அரசின் அறிவிப்பு மொழிப்போருக்கு வித்திடுகிறது, அதற்கு தமிழ்நாடு தயாராக உள்ளது. மொழிப்போரில் வெற்றிபெறுவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது எனக் கூறி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல் மு.க.ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்து அனைத்து கட்சி தலைமைக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமி த்ஷா இதனை மறுத்துள்ளார். ''மக்களவை தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது. தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர, குறையாது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, மத்திய அரசு, நிதி ஒதுக்கவில்லை, இந்தி மொழியை திணிக்கிறது. மீண்டும் மொழிப்போராட்டம் நடக்கும் என்றெல்லாம் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் பாககவை எதிரி போல் சித்தரித்து வருகிறார். மொழிப் பற்றை வைத்து திமுக எப்போதும் மக்களை திசை திருப்பி வருகிறது. அதற்காக மத்திய அரசு மீதும் பாஜக மீதும் வெறுப்பை உமிழ்ந்து அரசியல் செய்து வரும் திமுகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என பாஜக தலைமை ஒரு திட்டம் போட்டது. அதன் மூலம் மத்திய அரசு குறித்து ஸ்டாலின் சொல்வது பொய் என்பதை உடைக்க வேண்டும். அதையும் அவரை வைத்தே உடைக்க வேண்டும் என திட்டமிட்டது.
அப்போதுதான் முதல்வர் சொல்வது அனைத்தும் பொய் என தமிழக மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அவரை உசுப்பேற்றி விட்டு, மத்திய அரசுக்கு எதிராக வெகுண்டெழச் செய்து விட்டு அந்தத் திட்டதை மு.க.ஸ்டாலின் மூலமே புஷ்வானமாக்கி திசை திருப்ப வேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டம்.
அதற்கு பாஜக எடுத்ததுதான் மக்களவை தொகுதி மறு சீரமைப்பு அஜெண்டா. சில முக்கிய அதிகாரிகள் மூலம் மக்களவை தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்திற்கான எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தெரியப்படுத்தப்பட்டது. கிடைத்ததை எல்லாம் வைத்து மத்திய அரசுக்கு எதிராக வெகுண்டெழும் ஸ்டாலின் உடனே இந்த விவகாரத்தை கையில் எடுத்து அனைத்துக் கட்சிக்கூட்டம், எதிர்ப்பு அறிவிப்புகள் என எதிர்பார்த்தபடியே பரபரப்பை கிளப்பி வருகிறார்.
புகையவிட்டு எரியவிட்டு உடனே அணைய வைப்பதுதான் பாஜகவின் திட்டம். எதிர் பார்த்தது போலவே இந்த விவகாரத்தில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறார் மு.ஸ்டாலின். அதனை புஷ்வானமாக்கி இறுதியில், அவரடு நடவடிக்கைகளை அம்பலப்படுத்த உத்தேசித்துள்ளது பாஜக தலைமை. உண்மையில் மக்களவை தொகுதி குறைப்பே கிடையாது. 432 தொகுதியிலிருந்து இந்தியா முழுவதும் 700 தொகுதியாக மாற்றுவது தான் உண்மையான திட்டம். அந்த வகையில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் இருந்து மேலும் அதிகரிக்கவே உண்மையில் வாய்ப்பிருக்கிறது.
அதனால்தான் திமுகவை லேசாகக் கிளறிவிட்டு அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் ட்ரிக்கான கேம் விளையாடுகிறது பாஜக தலைமை'' என்கிறார் அந்த பாஜக முக்கிய நிர்வாகி.
இதையும் படிங்க: அப்பா வேஷம் போடும் திமுகவினர்... 2026இல் அம்மா ஆட்சிதான்.. ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா சூளுரை.!