மம்தாவின் மரண கும்பமேளா விமர்சனம்... கோபத்தில் கொந்தளித்த பாஜக தலைவர்கள்.!
மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு யின் கருத்துக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்திருந்தார். மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்து பற்றி மத்திய ஊரக வளர்ச்சி , விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், "சனாதனத்தை அவமதிப்பது எதிர்க்கட்சிகளின் இயல்பாகி விட்டது. இந்தியாவின் கலாச்சாரம் கங்கை நதியின் நீரோட்டதைப் போன்றது. ஆயிரமாண்டுகளாக தொடர்கிறது. சனாதனத்தை நோக்கி விரல் நீட்டும் எதிர்க்கட்சியினர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளைத் தாக்குவதும் குற்றம்தான்" என்று சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
இதற்கிடையே உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் மம்தாவுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார். “மகா கும்பமேளா வெறும் மத நிகழ்வு அல்ல. அது இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மிக பாரம்பரியத்தின் சின்னம். மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புகின்றன. பொய்யான கதைகளால் மகா கும்பமேளாவையும் சனாதன தர்மத்தையும் அவமதிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாது.
வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளாவை பிரம்மாண்டமானதாக நடத்த எனது அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் புனித நிகழ்வை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்" என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாகும்பமேளாவில் காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சி..! தொடர்ந்து குவியும் பக்தர்கள்