பொசுக்கென சிரித்த வானதி ஸ்ரீனிவாசன்... டைமிங்கில் அடித்த தங்கம் தென்னரசு... சட்டப்பேரவையில் “கலகல”
தங்கம் தென்னரசு டைமிங் சொன்ன காமெடியால் சட்டப்பேரவையே சில நிமிடத்திற்கு கலகலப்பானது.
இன்று சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான தங்கமணி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய மடிகணினி குறித்த கணக்கை விவரித்துவிட்டு, வெறும் 10 ஆயிரத்தில் எப்படி தரமான லேப்டாப் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். இதை வைத்து கூட்டி கணக்கு ஒரு கூட்டல் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு லேப்டாப்பிற்கு பத்தாயிரம் ரூபாய் தான் வருகிறது. இந்த பத்தாயிரம் ரூபாயில் எத்தகைய ஒரு தரமான கணினியை வழங்க முடியும்? என தங்கமணி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு வருகிற போது மேலும் அதற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அப்படிப்பார்த்தால் ஒரு மடிக்கணினிக்கு 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்க முடியும். மாணவர்களுக்கு நல்ல தரமான மடிகணினிகளை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆடு நனைக்கிறது என்று ஓநாய் அழுததாம்".. "உங்கள் கரிசனம் எங்களுக்கு வேண்டாம்".. பொறிந்து தள்ளிய இபிஎஸ்..!
தொடர்ந்து உரையாற்றிய தங்கம் தென்னரசு, உங்களுடைய கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவர் இடத்திலே உட்கார்ந்து இன்னொருவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். அப்போது பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாய்விட்டு சிரித்தார். அப்படியானால் “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்றார். தங்கம் தென்னரசுவின் டைமிங் காமெடியை பார்த்து வியந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவையே சில நிமிடத்திற்கு கலகலப்பானது.
இதையும் படிங்க: 375 ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைகிறது.. சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு..!