×
 

கண்ட கனவு நினைவானது... தற்பொழுது ஓடிடியில் டிராகன்..! குஷியில் இளசுகள்..!

பலரது கோரிக்கையாக இருந்த டிராகன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு டிராகன் படம் பெரிய புகழையே தேடி தந்துள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான AGS என்டேர்டைன்மெண்ட் கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள டிராகன்" திரைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனை போல இப்படம் அஷ்வின் மாரிமுத்துவுக்கும் மிகவும் பொக்கிஷமான படம் எனலாம். ஏனெனில் "ஓ மாய் கடவுளே" படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாகியுள்ளது "டிராகன்" படத்தின் இயக்கம். படம் பார்த்தவர்கள் அனைவரும் அஷ்வினை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் தொடங்கி இயக்குனர் சங்கர் வரை அனைவரது பாராட்டையும் இப்படம் பெற்றுள்ளது.  

இதையும் படிங்க: நடிகர் மகேஷ் பாபுவுக்கு கோரிக்கை வைத்த அஷ்வின் மாரிமுத்து... அடுத்து அவருடன் படமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

இந்தநிலையில், பல விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த நடிகர் சிலம்பரசன் அவரது எக்ஸ் தளத்தில் இப்படம் "பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமையும் என பகிர்ந்து இருந்தார். அவர் பதிவிட்டதை போல் படம் ஹிட் கொடுத்து தற்பொழுது 11 நாட்களில் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி அடைந்து உள்ளது டிராகன் படம்.

இதனால், டிராகன் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். என்னவெனில் தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது அப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினர். அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும், நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி போங்க பேசினார்.

இப்படி இருக்க, பல ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருவதாகவும் சீக்கிரமாக ஓடிடியில் வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது ஆசைக்கு இணங்க டிராகன் படம் மார்ச் -21ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது .

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் வீட்டில் குடும்பத்துடன் படத்தை பார்க்க தயாராகி வருகின்றனர்.

இதையும் படிங்க: திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல்... சாதனை படைத்த 'டிராகன்'..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share