திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... புத்தம் புதிய திரைப்படங்கள் இப்போது ஓடிடியில்..!
இந்த வாரம் ஓ.டி.டியில் மட்டும் எட்டு மெகா ஹிட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் பத்து படங்கள் வெளியாகும் என்று கூறி இருந்த நிலையில், தியேட்டரில் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படமும், வண்டர்பார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே. புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் ரெட் ஜெயிட் மூவிஸால் உருவாக்கிய "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படமும் வெளியாகி ஹிட் அடித்து கொண்டு இருக்கிறது.
செந்தில் கவுண்டமணி காமெடியில் வருவது போல்; சரி, இரண்டு இங்க இருக்கு மீதி "எட்டு" எங்க என்று சொல்பவர்கள், மீதமுள்ள எட்டு படங்களையும் ஓ.டி.டியில் காணலாம். அவைகளில் முதலில் வணங்கான் திரைப்படம், வி. ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் இசையில், ரோசினி பிரகாஷ் மற்றும் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் ஜனவரி 10-ந் தேதி வெளியான 'வணங்கான்' ஓ.டி.டியான "டென்ட்கொட்டா" தளத்தில் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: என்ன சிம்பு சார் மனசுலாயோ... ஃபர்ஸ்ட் இவர் படத்துல தான் நடிக்கனும்.. ரசிகர்கள் போட்ட கண்டிஷன்..!
பாட்டல் ராதா: நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, பாரி இளவழகன், அன்பரசி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியான திரைப்படம் 'பாட்டல் ராதா'. இப்படம் மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் நகைச்சுவை கலந்த படமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இப்படம் ஓ.டி.டியான "ஆஹா தமிழ்" தளத்தில் வெளியாகி உள்ளது.
டாகு மகாராஜ்: சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ், ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கத்தில், தமன் எஸ் இசையில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் 'டாகு மகாராஜ்'. இப்படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரூ.100 கோடிக்கு மேல் காசுல செய்துள்ள இப்படம் ஓ.டி.டியான "நெட்பிளிக்ஸ்" தளத்தில் வெளியாகி உள்ளது.
ஆபிஸ்: இயக்குநர் கபீஸ் இயக்கியத்தில் உருவாகி வெளியாகியுள்ள "ஆபிஸ்" நகைச்சுவை கலந்த வெப் தொடர்.கிராமம் ஒன்றில் அமைந்துள்ள குறிப்பிட்ட ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைச் மையமாக வைத்து இத்தொடர் அமைந்துள்ளது.இதில் நட்சத்திர நடிகர்களான குரு லட்சுமணன், சரித்திரன்,கெமி, ஸ்மேகா, தமிழ்வாணி, கீர்த்திவேல், பரந்தாமன், சிவா, அரவிந்த், டி.எஸ்.ஆர் மற்றும் பிராங்க் ஸ்டார் ராகுல்ஆகியோரும் நடித்துள்ளனர். .இந்த தொடர் ஓ.டி.டியான "ஜியோ ஹாட்ஸ்டார்" தளத்தில் வெளியாகி உள்ளது.
செல்பி: டிஜி பிலிம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில்,ஜி.வி. பிரகாஷ் இசையில், கௌதம் வாசுதேவ் மேனன், ஜிவி பிரகாஷ் குமார் , மற்றும் வர்ஷா பொல்லம்மா, வித்யா பிரதீப் , வாகை சந்திரசேகர் , சங்கிலி முருகன் , சுப்பிரமணியம் சிவா ஆகியோர் நடிப்பில் வெளியான ஆக்சன் திரில்லர் வகை திரைப்படம் 'செல்பி'. இப்படம் ஓ.டி.டியான "சிம்பிலி சவுத்" தளத்தில் வெளியாகி உள்ளது.
முபாசா தி லயன் கிங் : வால்ட் டிஸ்டனி பிச்சர்ஸ் தயாரிப்பில் ஜெப் நெதன்சொன் எழுத்தில், பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் முதல் பாகத்தில் மறித்து போன முபாஸாவை வாழ்க்கையை குறிக்கும் இரண்டாம் பாக படம் தான் "முபாசா தி லயன் கிங்". கடந்த டிசம்பர் வெளியான இப்படம் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் ஓ.டி.டியான "அமேசான் பிரைம்" தளத்தில் வெளியாகி உள்ளது.
சாட்சி பெருமாள் : இயக்குனர் வி.பி.வினு இயக்கத்தில், மஸ்தான் இசையில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் 'சாட்சி பெருமாள்'. இந்த படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் நிலைமையை விவரிக்கும் படமாகும். இந்த நிலையில் இப்படம் ஓ.டி.டியான "டென்ட்கொட்டா" தளத்தில் வெளியாகி உள்ளது.
தி ஒயிட் லோட்டஸ் : மைக் ஒயிட் எழுதி இயக்கத்தில், டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ளது "தி ஒயிட் லோட்டஸ் சீசன் 3" இதன் முதல் இரண்டு சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,அதனை தொடர்ந்து சீசன் 3 உருவாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் ஓ.டி.டியான "ஜியோ ஹாட்ஸ்டார்" தளத்தில் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பயம் இருக்கனும் சாமி... படத்துக்கே இத்தனை கோடி செலவுன்னா...வசூல் எத்தனை கோடியா இருக்கும்..!