×
 

லேடி சூப்பர் ஸ்டாருன்னு என்னை கூப்பிட வேண்டாம்..! நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகை கோரிக்கை..!

நடிகை நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகை, தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கவேண்டாம் என்று கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா இனி, தன்னை யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என்று லெட்டர் பேடு மூலமாக மக்களுக்கு தகவலை கொடுத்தார். இதனை பலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர், முதலில் உங்களுக்கு யார் அப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள், இதனை நீங்களாகவே உங்கள் படத்தில் வைத்து கொண்ட பட்டம் என அவரை ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

அதே போல், நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் "மூக்குத்தி அம்மன்-2"யை படமாக்க திட்டமிட்டு, சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் பூஜைகள் நடைபெற்றது.

அதில் பங்கு பெற்ற நடிகை குஷ்பூ "நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது என்றும் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, எங்கள் காலத்தில் யாருக்கும் பட்டம் கொடுத்து நாங்கள் பார்த்ததும் இல்லை. இன்று வரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். மற்ற யாருக்கும் அந்த பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நன்றாக இருக்கும்" என்று கூறி இருந்தார்.

இதையும் படிங்க: 100 கோடியில் வீடு... பணத் திமிரு; ஸ்டேட்டஸ் அரிப்பு... நயனை கிழித்தெடுத்த பத்திரிக்கையாளர்!!

இவரை தொடர்ந்து, பத்திரிகையாளரான 'செய்யாறு பாலு' நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் விவகாரம் பற்றி காட்டமாக பேசியிருந்தார். அதன்படி அவர் கூறுகையில், "நயன்தாராவை முதலில் யார் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து. அவரே தனக்கான பட்டத்தை தேர்ந்தெடுத்து போட்டு கொள்வாராம், பின் அவரே நீக்குவார்களாம், இது என்ன சாக்லேட் கதையாக உள்ளது. உங்களுக்கு தெரியுமா...? தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரை கேட்டாலும் அனைவரும் கூறுவது நடிகை விஜயசாந்தியை தான்.

காரணம், மன்னன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தார், அதற்காகவே தனது பெயரை டைட்டில் கார்டில் "லேடி சூப்பர் ஸ்டார்" என போட வேண்டும் என்று இயக்குநர் வாசுவை தொல்லை செய்தார். ஆனால் வாசுவோ இதை மறுக்க, பிரச்சனை பூதாகாரமானது, பின்னர் இந்த பிரச்சனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு, இப்படத்தில் தனது பெயருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடாமல் டைட்டில் கார்டை வையுங்கள் என சொல்லி பிரச்சனையை முடித்து வைத்தார்.

அந்த அளவிற்கு ரஜினிக்கே சவால் விட்ட ஒரே பெண் என்றால் அது விஜயசாந்தி தான். இப்படி இருக்க, இங்கு நயன்தாராவை யாருமே "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்கவில்லையே. எதை நினைத்து நயன்தாரா, தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று கூறுகிறார் என எனக்கும் விளங்கவில்லை, ரசிகர்களுக்கும் விளங்கவில்லை. இவராகவே தான் தனது பெயரை "லேடி சூப்பர் ஸ்டார்" என படங்களில்  போட்டுள்ளார்.

அவர் இதை மறுப்பாரானால், அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது, இயக்குநரிடம் தனது பெயருக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என போட வேண்டும் என்று சண்டைபோட்டார். பிறகு தான் சரி,போடுகிறோம் என்று சொன்ன பின்னர் தான் டைட்டிலையே போட விட்டாராம், இதை அவரால் மறுக்க முடியுமா. சரி, படத்திற்காக இவ்வளவு சண்டை போட்ட நயன்தாரா எதற்காக இந்த பட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்தார்? என விசாரித்தால் அப்பொழுது தான் உண்மையே தெரியவந்தது. நடிகை அனுஷ்கா நடிப்பில் "காட்டி" என்கிற படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த படத்தின் டைட்டில் கார்டில் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என பட்டம் சூட்டப்படவுள்ளது.

இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட நயன்தாரா, இது தொடர்பாக படக்குழுவினரிடம், லேடி சூப்பர் ஸ்டார் என அனுஷ்காவுக்கு போடக்கூடாது எனக் கூறியுள்ளார். அதற்கு அவர்களோ, நீங்கள் தமிழுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால், அனுஷ்கா தெலுங்கிற்கு லேடி சூப்பர் ஸ்டார், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, நாங்கள் கட்டாயம் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை போடுவோம் எனக் கூறியுள்ளார்கள்.

இப்படி, அனுஷ்கா லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் வாங்கினால் நம்முடைய மவுசு குறைந்து விடும் என்பதற்காக அஜித்தை போல், ரசிகர்களே நிங்கள் இனி என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறி சமாளித்து இருக்கிறார் நயன்தாரா" என ஆவேசமாக கூறியிருந்தார்.

இப்படி இருக்க நடிகை நயன்தாராவை தொடர்ந்து சின்னத்திரை நடிகையும் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார். அதன்படி, பிரபல தொலைக்காட்சியில் காமெடியனாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பிக்பாஸிலும் இருந்து அன்பு தான் முக்கியம் என்று சொல்லி அனைவராலும் அன்பாக "சின்னத்திரை நயன்தாரா" என்று அழைக்கப்படுபவர் தான் "அறந்தாங்கி நிஷா". இப்படி இருக்க, நடிகை நயன்தாராவை தொடர்ந்து இனி தன்னை யாரும் "சின்னத்திரை நயன்தாரா" என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தற்பொழுது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
 

இதையும் படிங்க: 'டெஸ்ட்' படத்தில் ஹீரோ மாதவனுக்கு நிகராக சம்பளம் வாங்கிய நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share