"ஒரே வார்த்தையில் பறிபோன ஆர்எம் வீரப்பன் பதவி"..! ஜெயலலிதாவை எதிர்த்த காரணத்தை அப்பட்டமாக உடைந்தார் - ரஜினிகாந்த்..!
ஜெயலலிதாவை எதிர்த்த காரணத்தை டாக்குமெண்டரி வாயிலாக உடைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.
அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: லேட்டஸ்ட் அப்டேட்டில் தெறிக்கவிட்ட கூலி...! படம் வெளியீட்டு தேதியை உரக்கச் சொன்ன சன்பிக்சர்ஸ்..!
இந்தநிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு இயக்குனர்கள் இரண்டு படத்தை இயக்கி வருகின்றனர். ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியானது. அதனை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்பொழுது ஜெயிலர் 2 படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதில் தற்பொழுது ரஜினி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை ரஜினி எதிர்த்ததற்கு காரணம் என்ன? என்பது தான். ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு தற்பொழுது பதில் தரும் விதமாக, "தமிழக முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவுகள் குறித்ததான "ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமெண்டரி" என்ற ஆவணப்படம் வாயிலாக தெரிவித்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த. அதில் பேசுகையில், "ஆர்.எம்.வி கிங்மேக்கர் தி டாக்குமெண்டரியில் அவரைப் பற்றி பேசுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனது வாழ்க்கையில் ரொம்ப நெருக்கமானவங்க, அன்பு காட்டுனவங்கனா நாலஞ்சு பேர் இருக்காங்க. அதுல பாலச்சந்தர் சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்எம் வீரப்பன் சார் ஆகியோர் தான்..
அவங்க இப்போது உலகில் இல்லை என்றாலும் என் மனதில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். 1995ம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' படத்தின் "நூறாவது நாள் விழா" பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் "தயாரிப்பாளர் வீரப்பன்" கலந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் அவர் இருக்கும் போதே, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி நான் காரசாரமாக பேசினேன். அப்போ ஆர்எம் வீரப்பன் அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அமைச்சரை மேடையில வைத்து கொண்டு நான் அப்படி பேசி இருக்க கூடாது தான். ஆனால் அதை பற்றிய தெளிவு எனக்கு அப்போதைக்கு இல்லை.
ஆதலால் மேடையில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசிவிட்டேன். அதற்கு பிறகு, அமைச்சரவையிலிருந்து ஆர்எம் வீரப்பனை ஜெயலலிதா தூக்கிட்டாங்க. அதுமட்டுமில்லாமல், எதற்காக என நான் குழம்பிய பொழுது, நீங்க மேடையில் இருக்கும் பொழுதே ரஜினி எப்படி வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினார் என சொல்லி தான் தூங்கி இருக்காங்க என்ற தகவல் எனக்கு தெரிந்ததும் ஒரு மாதிரி ஆடிப் போயிட்டேன். இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. பின், இரவு முழுவதும் போன் பண்ணா யாருமே எடுக்கல. காலையில் எழுந்தவுடன் போன்ல பேசினாரு ஆர்எம் வீரப்பன்.
அதற்கு பின், நேரடியாக அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். ஆனால் ஒன்றுமே நடக்காதது போல அவர் பேசினார். "நீங்க எதையுமே மனசுல வச்சுக்காதீங்க.. இன்னைக்கு என்ன ஷூட்டிங்.. சந்தோஷமா இருங்க"என சாதாரணமாக பேசினார். நான் உடனே, என்னால தான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு. நான் வேணும்னா ஜெயலலிதா கிட்ட பேசவா என கேட்டேன். அதற்கு அவர், வேண்டாம், நீங்க பேசினாலும் அந்த அம்மா ஏத்துக்க மாட்டாங்க.. நீங்களா பேசி உங்க மரியாதையை குறைத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லிட்டாரு. அதுமட்டுமில்லாம, நீங்க பேசி அங்கு நான் போய் சேரணும்னு எந்த அவசியமும் இல்லை என சொல்லிட்டார். உண்மையிலேயே ஆர்எம் வீரப்பன் எப்பேர்பட்ட மனுஷன் தெரியுமா அவர் தான் "ரியல் கிங்மேக்கர்" என கூறி இருக்கிறார்.
ரஜினி பேசியிருக்கும் இந்த வீடியோ தற்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது கூலி படத்தின் புது அப்டேட்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!