விஜய் டீவி பிரபலம் ஆபிஸ் ஓபன் பண்ணிட்டாரா..! என்னவா இருக்கும்... குழப்பத்தில் ரசிகர்கள்..!
பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் புதிய அலுவலகம் திறந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்யாணம் என்றால் மாப்பிள்ளை பெண் இருக்கணும், ஜல்லிக்கட்டு என்றால் காளை இருக்கனும், காதுகுத்து என்றால் காது குத்துபவர் இருக்கனும் இப்படி எல்லா நிகழ்ச்சிகளிலும் அதற்கு ஏற்ற ஆட்கள் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சிகளுக்கு மரியாதையும் இருக்காது, சுவாரசியமும் இருக்காது அதே போல் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் நிகழ்ச்சி இருக்க வேண்டும், அந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஒரு தொகுப்பாளர் இருக்க வேண்டும் அப்படி இல்லை எனில் அந்த நிகழ்ச்சிக்கே சுவாரசியம் இல்லை.
இப்படி இருக்க, தொகுப்பாளர் என்றால் நம் நினைவுக்கு வருவது, தீபக்,சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த், டிடி, பாவனா, அர்ச்சனா, பிரியங்கா, மணிமேகலை, ஜாக்லின் என அனைவரையும் சொல்லலாம், காரணம் இவர்கள் அனைவரும் தொகுப்பாளர்களாக இருந்து மக்கள் மனதை கவர்ந்தவர்கள். அதனால் தான் இன்று அளவும் இவர்களை மக்கள் விட்டு கொடுக்கமால் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பெண் மீது காதல் வயப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்... உண்மையை உடைத்த அவரது மனைவி.. இனி அவ்வளவுதான்...!
இப்படி, சிவகார்த்திகேயன் என்றால் பாவனா உடன் நிகழ்ச்சிகளில் இருப்பார், மாகாபா என்றால் பிரியங்கா உடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர், அந்த வரிசையில் ஜாக்லின் என்றால் ரக்ஷன் இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இரண்டு பேரும் தொகுத்து வழங்குவதில் கில்லாடிகள்.
இப்படி கலக்கப்போவது யார் என்ற தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வாழக்கையை ஆரம்பித்த ரக்ஷன் பல அவமானங்களை நிகழ்ச்சியில் பட்டும் பலருடைய கிண்டல்களுக்கு ஆளானாலும் அதனை சற்றும் பொருட்படுத்தாது தனது உழைப்பை கவனமாக செலுத்தி தன்னை நிகழ்ச்சியில் நிலைப்படுத்தினார், அதனால் அவருக்கு கிடைத்த பொக்கிஷம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி மூலமாக புகழின் உச்சத்தை தொட்டார் தொகுப்பாளர் ரக்ஷன். டைமிங் கவுண்டர், டைமிங் காமெடி, டைலாக் டெலிவரி, ஆகியவை அவருக்கு அடுத்த நகர்வுக்கு காரணமாக இருந்தது.
இதில் ரக்ஷன் போட்ட உழைப்பு இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்க வைத்துள்ளது. ஆம், அவர் உழைப்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷனையும் துல்கர் சல்மானுடன் நடிக்க வைத்து அழகு பார்த்தது. அதன் பின் சூப்பர் ஸ்டாரின் "வேட்டையன்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஸ்டாரானார். இதனை அடுத்து "மறக்குமா நெஞ்சம்" என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படி பல பரிணாமங்களில் வெற்றி பெற்று வரும் ரக்ஷன் தனது வாழ்க்கையின் அடுத்த நகர்வாக தனது சொந்த உழைப்பில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளார். திறந்த அலுவலகத்தின் முகப்பில் நின்று தனது மனைவி மற்றும் அம்மாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வரும் நிலையில் எல்லாம் சரிதான் எதற்க்காக இந்த அலுவலகம் எனவும் கதை சொல்ல வருபவர்களை கவுரவிக்க இந்த அலுவலகத்தை திறந்து உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?