தோல்வியே காணாத அட்லீயின் 'மெர்சல்' படம் நஷ்டமா...? தயாரிப்பாளர் ஓபன் டாக்...!
மெர்சல் திரைப்படம் தோல்வியடைந்த படம் என கூறியவர்களுக்கு அதிரடி பதில் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி.
பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுத்தில், பிரமாண்ட இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், விஜய், காஜல் அகர்வால், சத்யன், சத்யராஜ், கோவை சரளா, வடிவேலு, யோகிபாபு,சமந்தா, எஸ்.ஜே. சூர்யா, நித்யா மேனன் என பலரது நடிப்பில் காதல், நகைச்சுவை, அதிரடி போன்ற காட்சிகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் "மெர்சல்".
அட்லீயின் இயக்கத்தில் தெறி, பிகில், ராஜா ராணி, ஜவான் என பல படைப்புகள் வந்தாலும் மெர்சல் படத்திற்கு இணையாகாது என்னும் அளவிற்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருப்பார். வெற்றி என்ற மேஜிக்மேனாக காஜல் அகர்வாலுக்கு ஜோடியாகவும், மாறன் என்ற 5ரூபாய் டாக்டராக சமந்தாவுக்கு ஜோடியாகவும், இவர்கள் இருவரின் அப்பாவான வெற்றிமாறன் என்ற ஊர் தலைவராக நித்யா மேனனுக்கு கணவராகவும் நடித்து இருப்பார் நடிகர் விஜய்.
இதையும் படிங்க: புஷ்பாவுடன் ஃபையராக வருகிறார் அமரன்... அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரபல நடிகர்..!
படம் ஆரம்பம் முதல் முடியும் வரை சிலிர்க்க வைக்கும் காட்சிகளை மட்டுமே அட்லீ கொடுத்திருப்பார். மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை அழகாக சித்தரிக்கும் படமாக இப்படம் அமைந்தது. மதுரையை சேர்ந்த வெற்றிமாறன் நித்யாமேனனை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெறுவார். அதில் ஒன்று 'வெற்றி' மற்றோன்று 'மாறன்'. இவர் மக்களுக்காக தனது சொத்துக்களை விற்று இலவச மருத்துவமனை காட்டுவார். அதனை எஸ்.ஜே.சூர்யா அபகரிக்க நினைத்து,அதற்கு தடையாக இருந்த வெற்றிமாறனை கொலை செய்வார் எஸ்.ஜே.சூர்யா. வெற்றிமாறன் சாகும் தருவாயில் "நீ செய்யும் தவறு இரண்டாக உன் கண்முன் வரும்" என்றும் "டேனி, ஒருநாள் எங்கள் கைகள் ஓங்கும்" என்றும் கூறி மறித்து போவார். இதனை அறிந்த வெற்றிமாறனின் இரண்டு மகன்களும் டேனியை கொள்வர். இப்படி கதையே அமர்களமாக இருந்தது.
இப்படத்தை பலமுறை ரசிகர்கள் இப்படத்தை பார்த்து ரசித்தது உண்டு. இந்த சூழலில், மெர்சல் படம் நஷ்டம் அடைந்து விட்டதாகவும் தயாரிப்பாளர்கள் மறுப்பதாகவும் தொடர்ந்து பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் "நாங்கள் ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள் பண்ணுவோம். ஒரு படம் மட்டும் பண்ணிவிட்டு காத்திருக்க மாட்டோம். இப்படி இருக்க, ஒரு படத்தினுடைய சுமை இன்னொரு படத்திற்கு கண்டிப்பாக போகும். நாங்கள் படம் கொடுத்தால் மட்டும் தான் நீங்கள் பாப்பீங்களா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே. இன்றும் எங்களுடைய சகோதரர்கள் படம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களும் நல்ல entertainmnet படங்களை கொடுத்து கொண்டு தான் உள்ளார்கள். அதனால் தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசவேண்டாம். நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம், மெர்சல் படம் எங்களை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்ற படம்.. நாங்க எவ்வளவு படம் எடுத்தாலும், மெர்சல் தயாரிப்பாளர்கள் என்று தான் அடையாளம் சொல்லுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விஜய் சார் உடன் வேலை பார்த்தது மிகவும் பெருமை" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தோல்வியை பாராத இயக்குநரின் அடுத்த படம் சிவகாத்திகேயனுடன்.. விஜயை வைத்து மாஸானவர் தற்போது skவை வைத்து என்ன ஆக போகிறாரோ..!