×
 

“இன்னம் ஐந்தே வருஷத்துல...” நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்...! 

அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சி திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சி திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 9,369 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  

20 திட்டப்பணிகளுக்கு அடிக்கல்: 

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வில் ஈடுபட்டு வரக்கூடிய முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருநெல்வேலிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் இரண்டாம் நாளான இன்று சாலையின் ஓரம் நின்ற பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர். பள்ளி மாணவிகளிடம் புதுமைப்பெண் திட்டம் பற்றி பேசினார்.

இதையும் படிங்க: “இருட்டுக்கடை அல்வா சாப்பிட நேரமிருக்கு... இது மட்டும் முடியாதா?”... முதல்வருக்கு எதிராக கொதித்தெழுந்த மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள்!

பின்னர் சாலை மார்க்கமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 1304.66 கோடி ரூபாய் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309 கோடி ரூபாய் மதிப்பிலான 20 திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டினார். 

40,000 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா 40 இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், டிராக்டர், பேட்டரி வாகனங்கள், கழிவுநீர் வாகனம், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். 

75,151 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் இரண்டு நாள் பயணத்தில் திருநெல்வேலியில் 8,771 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் புதிய திட்டங்களை துவங்கி வைத்துள்ளார்.

கலைஞரை நினைவு கூர்ந்த முதல்வர்: 

பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர்  நெல்லை சீமையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். விஜயநகர ஆட்சியாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கியமான நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி, ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி ஏற்படுத்திய மண் இந்த நெல்லை மண். ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல 17 ஆண்டுகள் வெள்ளையருக்கு எதிராக புரட்சி நடத்தியவர் தான் பூலித்தேவன். 

நெல்லையின் அடையாளமாக முக்கியமானது நின்ற சீர் நெடுமாறினால் கட்டப்பட்ட நெல்லையப்பர் கோவில் இப்படி பாரம்பரியமிக்க கோவிலில் 700 ஆண்டுகளுக்கு புதுப்பித்து திருப்பணிகளை செய்தவர் கலைஞர், நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் பணி தற்போது நடைபெற்று வருகிறது விரைவில் அது ஓட துவங்கும் என கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் முக்கியமான பல்வேறு திட்டங்கள் துவங்கியது, கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்களின் மேற்பார்வையில்  அவர் முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ளது தாமிரபரணி கருமேணி ஆறு நம்பியார் இணைப்பு திட்டம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று இந்த திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லைக்கான திட்டங்களின் பட்டியல்: 

பொருணை அருங்காட்சியகம், திருநெல்வேலி மேற்குப் புறவழிச்சாலை, அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை, தாமிரபரணி நீர் ஆதாரத்தை கொண்டு 605 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் 2021, 22 முதல் டிசம்பர் 2024 வரை 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்பட்டு வருகிறது எனக் கூறினார். 

நாங்குநேரி மறுகால் குறிச்சி பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் அமைக்கப்படும், மூளைகருப்பட்டி பகுதியில் சிப்காட் வளாகம் அமைக்கப்படும் என மேடையில் முதலமைச்சர் கூறினார்.

நெல்லை மக்களுக்கு குட்நியூஸ்: 

அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சி என்பது திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பகுதிகள் முன்னேற்றமாக பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அது நிச்சயம் நினைவாகும் என்றார். 

தமிழகத்தின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார்கள் ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்துகிறார்கள் அவர் அவர்களுக்கு பதிலுக்கு பதில் பேச நான் விரும்பவில்லை.  நாம் செய்யக்கூடிய நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். மக்களுக்கு நன்மை என்றால் அதை செய்து கொடுப்பவன் தான் நான் என முதலமைச்சர் மேடையில் பேசினார். 

திமுகவை எப்படி கலைக்கலாம், தமிழகத்தின் வளர்ச்சியை எப்படி கலைக்கலாம் அவர்களின் நீண்ட நாள் திட்டத்திற்கு இடையூறாக இருப்பது தமிழகத்தில் திமுக ஆட்சி தான் உண்மையான வரலாற்றை தோண்டி எடுக்கிறார்கள்.  ஆகவே அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. 

 நான் உறுதியோடு சொல்கிறேன் தமிழ்நாட்டுக்கு பக்கபலமாக திமுக ஆட்சி எப்போதுமே இருக்கும். திமுகவின் பக்கபலமாக மக்களாகிய நீங்களும் பக்கபலமாக இருப்பீர்கள். நாங்கள் பெரியாரின் வழிவந்தவர்கள், அண்ணாவின் வெளிவந்தவர்கள், கலைஞரின் வழிவந்தவர்கள், உங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டும் என்றார். 

இதையும் படிங்க: ஆசை ஆசையாய் இருட்டுக்கடை அல்வாவை ருசி பார்த்த முதல்வர்... வாயில் போட்ட மறுகணமே கேட்ட அந்த கேள்வி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share