அதிகப்பிரசிங்கித் தனம்... வேல்முருகன் மீது ஆத்திரத்தில் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..!
வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவுக்கு பரிந்துரைத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவுக்கு பரிந்துரைத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை வைத்தார். அப்போது இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுள்ளதா?, மத்திய அரசுக்கு அதிகாரமுள்ளதா? என விவாதம் வெடித்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தொடர்ச்சியாக அமைச்சர்கள் பதில் பேசி வந்தார்கள்.
அப்போது குறிக்கிட்டு பேசிய வேல்முருகன், இந்த சாவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தெலுங்கானாவில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்கும் அது தொடர்பாக அதிகாரம் இருக்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ச்சியாக இந்த விவாதமானது நடைபெற்றிருந்த நிலையில் வேல்முருகன் இது தொடர்பாக தொடர்ச்சியாக பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால், அவையில் ஒரு பக்கம் கத்திக்கொண்டிருந்தார். எனவே இது தொடர்பாக அமைதியாக இருக்கும்படி தொடர்ச்சியாக சபாநாயகர் அவருக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.
இதையும் படிங்க: ஓஹோ... இதுக்குத்தான் அப்பாவு மேல தீர்மானமா?... அதிமுகவை அடித்து நொறுக்கிய மு.க.ஸ்டாலின் ...!
மேலும் தொடர்ச்சியாக அவர் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் பேசியதன் காரணமாகவும், முதலமைச்சர் ஒரு கட்டத்தில் எழுந்து நின்று வேல்முருகனின் இந்த செயல் ஏற்கத்தக்கதல்ல என பேசினார். மேலும் வேல்முருகனின் இந்த செயல் வேதனைக்குரியதாக இருப்பதாகவும், மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, சபாநாயகர் இருக்கைக்கு அருகே வந்த வேல்முருகன் தனக்கு பேச அனுமதிக்க வழங்க வேண்டுமெனக் கோரி தொடர்ந்து முழக்கமிட்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினருக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பதாகவும், அவருடைய இருக்கைக்குச் செல்லும் படியும் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனுக்கு அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வேல்முருகன் இன்று தொடர்ந்து சட்டமன்ற நடவடிக்கைக்கு இடையூறாக இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இந்த விஷயத்துல மாற்று கருத்து இருக்கக்கூடாது”... அனைத்து கட்சி கூட்டத்தில் கட் அண்ட் கறாராக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்....!