×
 

பேருந்து ஓட்டுநருடன் தகாத உறவில் கல்லூரி மாணவி: கட்டிப்பிடித்தபடி துள்ளத் துடிக்க சாவு..!

திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவி சம்யுக்தாவை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் உல்லாசப்பறவைகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

தகாத உறவு வெளியே தெரிய வந்ததால் கல்லூரி மாணவியும், தனியார் பேருந்து டிரைவரும் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது குன்னூர் கிராமம். இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆணும், இளம்பெண்ணும் உடல் சிதறிக் கிடப்பதாக  தேனி ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் இர்வினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆண், பெண் உடல்கள் ரயிலில் மோதி பல பாகங்களாக சிதறி கிடந்தன. 

இது குறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் 35 வயதான மணிகண்டன். தனியார் பேருந்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்தில் மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து வந்தபோது, கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சம்யுக்தா என்கிற கல்லூரி படிக்கும் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.  மணிகண்டன் தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவி சம்யுக்தாவை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் உல்லாசப்பறவைகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் சம்யுக்தாவின் பெற்றோருக்கு தெரிய வந்து மணிகண்டன் பற்றி விசாரித்துள்ளனர். அப்போதுதான் மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு குழந்த்தை இருப்பதையும் அறிந்துள்ளனர். இதையடுத்து சம்யுக்தாவின் பெற்றோர்கள் மணிகண்டனை மறந்து விடும்படி மகளை கண்டித்துள்ளனர். ஆனால், சம்யுக்தாவால் திருமணமான மணிகண்டனுடான காதலை உதறித் தள்ள முடியவில்லை. 

இதையும் படிங்க: என்னை பஸ்ல ஏத்தலனா கல்லால அடிப்பேன்.. மது போதையில் பேருந்தில் ஏறியவர் அட்ராசிட்டி..!

கடந்த 2 நாட்களுக்கு முன் மணிகண்டனும், சம்யுக்தாவும் வீட்டை விட்டு கிளம்பி மோட்டார் சைக்கிளில் பல்வேறு  இடங்களுக்குச் சென்று ஜாலியாக இருந்துள்ளனர். தேனி அருகே உள்ள வைகை அணைக்கு நேற்று முன்தினம் வந்து சுற்றிப்பார்த்துள்ளனர். அங்கே உல்லாசமாகப் பொழுதை போக்கிவிட்டு அன்று இரவு 9 மணியளவில் தேனி குன்னூர் வைகையாற்று பாலம் அருகே, மயானத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளனர்.

அப்போது போடியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் அவர்கள் மீது மோதி, இருவரும் உடல் சிதறி இறந்தனர். இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை விவசாய பணிகளுக்கு சென்றோர் பார்த்து தெரிவித்த பிறகே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் எண் மூலம் போலீசார் விசாரித்தபோதுதான் முழுமையான தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் இருவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: கடன் தொல்லையால் விபரீதம்.. 2 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை.. சென்னையில் சோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share