×
 

வறுமையில் வாடும் நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயா... ஆதரவின்றி அரசு மருத்துவமனையில் அனுமதி....

சந்தானம் படங்களுக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதிய நடிகர் 'சிரிக்கோ உதயா' சர்க்கரை வியாதியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது கால் அகற்றப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் வெளியான லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிரிக்கோ உதயா. சந்தானம் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களிடம் அறிமுகமானவர். இதன்வாயிலாக திரைப்படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை நடிப்பு மட்டுமின்றி மிமிக்ரி கலைஞராகவும் , வயலின் இசைக் கலைஞராகவும் சிரிக்கோ உதயா செயல்பட்டு வந்தார். 

குறிப்பாக நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் 15 வருடங்கள் இணைந்து பணியாற்றியவர் சிரிக்கோ உதயா. சந்தானத்தின் பல நகைச்சுவை காட்சிகளுக்கு வசனம் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. குறிப்பாக "யாரு சார் உங்க ரிலையன்ஸ்சா" "தானா வந்த தமன்னாவை தலைல தட்டி அனுப்பிட்டானே" "ராணுவத்தில் அழிஞ்சவனை காட்டிலும் ஆணவத்தில் அழிஞ்சவன் தான் அதிகம்" போன்ற பல பிரபலமான வசனங்களை எழுதியது இவர்தான்.

இதையும் படிங்க: அடித்து தூக்கிய அம்பானி ..! டிஸ்னி ஹாட்ஸ்டார் இனி JIO HOTSTAR...!

கடந்த சில வருடங்களாக சர்க்கரை வியாதியால் இவர் அவதிப்பட்டு வந்தார். நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிரிக்கோ உதயா அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அவரது வலது கால் அகற்றப்பட்டுள்ளது. இனிமேல் படவாய்ப்புகள் வருமா? என்ற கவலையில் அவரும், அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்துள்ளனர்.

கடைசியாக கனாக்காணும் காலங்கள் என்ற வெப் தொடரில் அவர் நடித்திருந்தார். "இப்போ என் வாழ்க்கையே கனவு காண்ற வாழ்க்கையா மாறிப்போச்சு"... என்று தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறிவருகிறார் சிரிக்கோ உதயா. வாழ்நாள் முழுவதும் பிறரை சிரிக்க வைத்து தன்னுடைய வயலின் இசையால் மகிழ்வித்த ஒரு கலைஞன் வறுமையின் பிடியில் சிக்கி உதவிக்கரம் ஏந்தி காத்திருக்கிறார். 
 

இதையும் படிங்க: தேவதை போல் இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share