×
 

"என் இனிய பொன் நிலாவே" பாடலை பயன்படுத்த ரூ 30 லட்சம் கட்ட வேண்டும்..! ஐசரி கணேசுக்கு கோர்ட் உத்தரவு

என் இனிய பொன் நிலாவே பாடலை பயன்படுத்த ரூ 30 லட்சம்

பிரபல கல்லூரி உரிமையாளரும் பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தனது தயாரிப்பான அகத்தியாவில் 'என் இனிய பொன் நிலவே' என்ற கிளாசிக் பாடலின் மறுஉருவாக்கப் பதிப்பைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மட்டுமே பாடலை பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மூடு பனி திரைப்படத்தில் வெளிவந்த என் இனிய பொன் நிலாவே  (1980) என்ற பாடலின் பதிப்புரிமைதாரரான சரேகமா இந்தியா லிமிடெட், பதிப்புரிமை மீறல் தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தனர்   தற்பொழுது இது தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் 
பாடலை மீண்டும் உருவாக்க பெரும் பொருட்செலவு ஏற்படும் என்பதால்  பாடலைப் பயன்படுத்த வேல்ஸ் பிலிம் சார்பாக ரூபாய் 30 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடலின் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்து விட்டதால் பாடலைப் பயன்படுத்துவதைத் தடுத்தால்  வேல்ஸ் பிலிமுக்கு "ஈடுசெய்ய முடியாத இழப்பு " ஏற்படும் என்று நீதிமன்ற  உத்தரவில் கூறப்பட்டுள்ளது, மூடு பனியைத் தயாரித்த ராஜா சினி ஆர்ட்ஸ் உடனான ஒப்பந்தம் மூலம் பாடலின் வரிகள் மற்றும் இசையின் copy right உரிமை சரேகமா இந்தியா நிறுவனத்திடம் உள்ளது என அந்த நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. சமூக ஊடகங்களில் அகத்தியாவின் டீசரில் மீண்டும் உருவாக்கப்பட்ட பாடலைக் கண்டுபிடித்ததாக சரேகமா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'பாலிவுட் சூப்பர் ஸ்டார்' 59 வயது அமீர்கானின் 3-வது காதல்: புதிய காதலி, தென் இந்திய பெண்! 

சரேகமவின் சட்டப்பூர்வ அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, வேல்ஸ் பிலிம் நிறுவனம் பாடலை இசையமைத்த  இசையமைப்பாளரிடமிருந்து பாடலை "தழுவுதல், பதிவு செய்தல்/மீண்டும் உருவாக்குதல்" உரிமத்தைப் வாங்கிவிட்டதாக தெரிவித்தனர்.

வேல்ஸ் பிலிம்ஸின் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது, "என் இனிய பொன் நிலாவே" பாடல் வரிகள் அல்லது ஒலிப்பதிவு மீது இசையமைப்பாளர் பதிப்புரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றும், எனவே அந்த உரிமைகளை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது என்றும் கூறியது. பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 17 இன் படி, இசையமைப்பாளருடன் வேறுவிதமாக ஒப்பந்தம் செய்யாவிட்டால், படத்தின் தயாரிப்பாளர்தான் படத்தின் ஒலிப்பதிவுகள், இலக்கியப் படைப்புகள் மற்றும் இசைப் படைப்புகளுக்கான பதிப்புரிமையின் முதல் உரிமையாளர் என்று நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகை ஸ்வரா பாஸ்கர் X சமூக வலைத்தள பக்கம் முடக்கம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share