×
 

சினேகா கேட்ட கேள்வி மணிமேகலை சொன்ன பதில் - எதிர்பார்ப்பை கூட்டும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ப்ரோமோ !

தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். மாறுபட்ட கதைக்களம் மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது.

தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் நாளை முதல் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் சீசன் 3 தொடங்க உள்ளது. 

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். 

அதுமட்டுமின்றி இதுவரை இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே பாலாஜி சோலோவாக தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனில் இருந்து மணிமேகலையும் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சில ப்ரோமோ வீடியோக்கள் மூலமாக உறுதியானது. 

இதையும் படிங்க: கமல்ஹாசனின் ரீல் மகளா இது? கவர்ச்சியில் உச்சம் தொட்ட ஹாட் போட்டோஸ்!

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ மூலமாக அல்டிமேட் Fun இருக்கு என்பது உறுதியாகியுள்ளது. அதாவது, விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எங்க தலைவி வர போறாங்க என்று அவங்களை பத்தி பில்டப் பண்ணனும் என்று சொல்லி இரண்டு பவுன்சர்கள் என்ட்ரி கொடுக்கின்றனர். 

வேணாம் பா வேணாம் பா அப்படிப்பட்ட தலைவியே எங்களுக்கு வேண்டாம் என்று பாபா பாஸ்கர் சொல்கிறார். பிறகு மணிமேகலை என்ட்ரி கொடுத்து ஆங்கரிங் பண்ண வந்திருக்கேன் என்று சொல்ல சினேகா சின் கேள்வி என குறுக்கிடுகிறார். 

ஒரு பெரிய செலபிரிட்டி கிட்ட பேசுறோமே என்ற தயக்கம் எல்லாம் உங்களுக்கு வேண்டாம் என்று மணிமேகலை கவுண்ட்டர் போட சினேகா ஆங்கரிங் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்புகிறார். மணிமேகலை யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிறாங்க என விஜயை அடிக்க சரியா தானே கேக்குறாங்க என விஜயும் பதிலடி கொடுக்கிறார். 

இதையடுத்து பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த மேடை எத்தனை டான்சர்களை உருவாக்கி வாழ்க்கை கொடுத்து இருக்கு தெரியுமா என்று கேட்க நானே ஒரு டான்சரை கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்து இருக்கேனு உங்களுக்கு தெரியுமா அல்டிமேட் Fun அதிரடியாக ஆரம்பமாகிறது. 

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: பான் இந்தியா பட நாயகியோடு ரொமான்ஸ் பண்ண போகும் அஷோக் செல்வன்; புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share