டெல்லி சட்டசபை புதிய சபாநாயகர் பாஜகவின் விஜேந்தர் குப்தா.. 'ஆம் ஆத்மி' சபாநாயகரால் நீக்கப்பட்டவரை தேடி வந்த பதவி..!
டெல்லி சட்டசபை புதிய சபாநாயகர் பாஜகவின் விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி சட்டசபையின் சபாநாயகராக ரோகிணி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் பாஜக அணியில் வெற்றி பெற்ற 48 எம்எல்ஏக்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆவார். எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 37 ஆயிரத்து 816 வாக்குகள் அதிகமாக இவர் பெற்றிருந்தார்.
இந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையையும் இவர் ஏற்படுத்தி இருக்கிறார். 61 வயதான விஜேந்தர் குப்தா ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 20 25 வரை டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பணிபுரிந்தார்.
இதையும் படிங்க: பதவி ஏற்றார் பாஜகவின் ஒரே பெண் முதல்வர்..! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து..!
இவருக்கு முன்பாக சபாநாயகராக இருந்த பாஜகவின் ராம் வீர் சிங் பிதூரி நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்த பதவியை குப்தா அலங்கரித்தார். ஏப்ரல் 2015 முதல் பிப்ரவரி 2020 வரையும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மே 2019 பிப்ரவரி 2013 வரை அவர் பாஜகவின் டெல்லி பிரிவை வழிநடத்தினார்.
இதற்கிடையில் அப்போதைய ஆம் ஆத்மி கட்சியின் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலின் உத்தரவின் பேரில் விஜேந்தர் குப்தா சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பழைய வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோக்கள் குறித்து கருத்து தெரிவித்த பாஜகவினர், "இப்போது சட்டமன்றத்தின் புதிய தலைமை அதிகாரியாக எப்படி தயாராக இருக்கிறார் என்பதை பாருங்கள் ; அதே நேரத்தில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராம் நிவாஸ் கோயல் ஆகிய இருவரும் சட்டமன்றத்தில்இருக்க மாட்டார்கள்" என்பதை சுட்டிக் காட்டினார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் பர்வேஸ் வர்மாவிடம் தோல்வியை தழுவினார். அதே நேரத்தில் ராம்நிவாஸ் கோயல் தனது வயதை காரணம் காட்டி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு 22 எம்எல்ஏகள் உள்ளனர். சபாநாயகர் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா இன்று மதியம் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் பரமேஸ் வர்மா உள்பட 6 கவர்மெண்ட் அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
இதையும் படிங்க: அப்போது அப்பா… இப்போது மகன்..! டெல்லி முதல்வர் பதவியை தட்டிப்பறித்த பாஜகவின் 2 பெண்கள்..!