×
 

கவுண்டமணியை வம்பிழுக்க வடிவேலு என்ன செய்வார் தெரியுமா..! நடந்ததை உடைத்த இயக்குநர்..!

கவுண்டமணி, செந்திலையே என் படத்திலிருந்து வெளியே போக வைத்தவர் தான் வடிவேலு என இயக்குநர் வி.சேகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரம் என்றால் நாகேஷ், மனோரம்மா, கவுண்டமணி, செந்தில், சந்தானம், யோகிபாபு என பலர் இருந்தாலும் காலம் மாறும்போக்கில் அனைவரும் மறக்கடிக்கப்பட்டாலும் இன்னும் மீம்ஸ்களின் ராஜாவாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. என்னா மனுஷன்...., ஒரு ஆணியும் வேண்டாம்... ஒயி பிளட் சேம் பிளட். குருநாதா இதுக்குமேல தாங்க முடியாது குருநாதா... என பல டைலாக்குகளுக்கு சொந்தக்காரர் வடிவேலு.

ஒரு முறை பத்திரிகையாளர்கள், திரையுலகில் தான் உருவாக்கியதை பிறர் பயன்படுத்தினால் காஃபி ரைட்ஸ் போடும் போது உங்கள் காமெடிகளுக்கும் டைலாக்குகளுக்கும் ஏன் போடவில்லை என கேட்டதற்கு, நான் நடிக்காமல் இருக்கும் காலத்திலும் என் காமெடிகள் எப்பொழுது பயன்பாட்டில் இருப்பது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என சொன்னார். இப்படியெல்லாம் ஒரு பக்கம் கூறினாலும், அவரை குறித்து அவருடன் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் சரமாரியான குற்றச்சாட்டை இப்பொழுது வரை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆபாசமா... சமூக சேவையா..! காசு வாங்காமலா நடிச்சிருப்பீங்க.. ரச்சிதாவை வறுத்தெடுத்த ரிப்போர்ட்டர்..!

இந்த சூழலில், நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார் வடிவேலு. தற்போது அவர் மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவை ஒருபக்கம் இருக்க, தற்பொழுது வடிவேலு குறித்து இயக்குநர் வி.சேகர் பேசியிருக்கும் விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி அளித்த வி.சேகர், வடிவேலு அவரது இரண்டாவது படத்திலேயே கார் வாங்கி சிக்கலில் சிக்க ஆரம்பித்தார். ஒருநாள் கவுண்டமணி, செந்தில் இருவரும் "நான் பெத்த மகனே" படத்தின் ஷூட்டிங்கிற்கு தங்களது காரில் வந்தவர்கள் அவர்களது காரை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். அங்கு தன்னுடைய காரில் வேகமாக வந்த வடிவேலு; கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் கார்களை இடிப்பது போல சென்று தனது காரை பார்க் செய்ய, இதனை பார்த்த செந்தில் என்ன அண்ணா தம்பி வண்டியை இப்படி ஓட்டுறாரே கொஞ்சம் விட்டிருந்தா வண்டியை இடித்திருப்பார் என கூறினார்.

அதற்கு கவுண்டமணி "இந்த வடிவேலு கொஞ்சம் விவகாரமான ஆளாக இருப்பான் போல" என சொன்னார். ஆனாலும் பொறுக்க முடியாத செந்தில் இதனை என்னிடம் சொல்ல, நான் வடிவேலுவிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, வடிவேலு " ஆமா..! வேகமாக தான் வந்தேன்.. காரை பார்க்கிங்கில் நிறுத்தாம வேறு எங்க நிறுத்த, அவங்க வண்டிமேல இடிப்பது போல் தான் வந்தேன் ஆனால் இடிக்கலையே" என்று சொல்லிவிட்டு சென்றது.

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. வடிவேலு நடிக்க வந்ததிலிருந்து ஒரே இம்சையாக தான் இருக்கும், காரணம் வடிவேலுவால் செந்தில், கவுண்டமணி படத்தை விட்டே வெளியேறினார்கள். கவுண்டமணி பார்க்கும் படி என்னை காரில் அழைத்து கொண்டு ரவுண்டு அடிப்பார் என ஆதங்கமாக கூறினார். இந்த நிலையில் வடிவேலு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும், ஆனால் என்றும் மக்களுக்கு நல்ல நகைச்சுவை நாயகனாக இருக்கிறார் அதுவே போதும் என்கின்றனர் நெட்டிசன்கள்.
 

இதையும் படிங்க: வசூல் வேட்டையில் மிரள வைக்கும் நே ஜா-2..! எத்தனை கோடி தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share