×
 

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெறித்தவர் பிரசாந்த் கிஷோர்... விஜய்யை எச்சரிக்கிறதா விசிக..?

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெறித்தவர் பிரசாந்த் கிஷோர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

விசிகவிலிருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தவெகவில் ஆதவ் அர்ஜூனா இணைந்தார். கட்சியில் அவர் சேர்ந்த பிறகு, தவெகவை துடிப்புள்ள கட்சியாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆதவ் அர்ஜுனா மூலம் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விஜய்யுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தியதும், பின்னர் ஜான் உள்ளிட்டவருடன் ஆலோசனை நடத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை விஜய்க்கு கொடுத்ததாக தெரிகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் பணியாற்றியவர் என்பதால், விஜய்யுடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.


இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் குறித்து விசிக செய்தித் தொடர்பாளர் பாவலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பிரசாந்த் கிஷார் - விஜய் சந்திப்பு, என்ன வேடம் கட்டினாலும் ஆட்டம் எடுபடாது. வியூகம் என்பது குறளி வித்தை. தேர்தல் வியூகம் என்பதெல்லாம் ஒரு மாயை. வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர், பீஹார் தேர்தலில் பல தொகுதிகளில், 'டிபாசிட்' தொகையைக் கூட பெற முடியாமல், அதள பாதாளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த வியூக வண்டி. தேர்தல் வியூகம் என்பது குறுக்கு வழி; மக்களை ஏமாற்றும் வழி; ஜாதி அடிப்படையிலான ஓட்டுகளை நியாயப்படுத்தும் வழி.

கடந்த 2021இல் தி.மு.க. வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் காரணம் என்றால், 2024 லோக்சபா தேர்தல் வெற்றிக்கு யார் காரணம்? வியூகம் என்பது ஒன்றும் கிடையாது. வேலையில்லா இளைஞர்களை வைத்துக்கொண்டு, கட்சிகளிடம் பணம் பறிக்கும் வேலை. தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுகிறது என்றால், கொள்கை சார்ந்து வலுவான கூட்டணி அமைத்ததுதான் காரணம்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளில் காங்கிரசை தவிர, மற்ற கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஆறு தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக்கூடாது எனக் கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்துவிட்டு சென்றவர், பிரசாந்த் கிஷோர். வியூகத்தை நம்பாமல், கொள்கையோடு மக்களை நாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்." என்று பாவலன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தம்பி இந்தா பார்த்துக்கோ....வன்னி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share