×
 

ஜெயலலிதா புடவை பிடித்து இழுத்த திமுக, நாகரீகம் பற்றி பேசலாமா..? அலறவிட்ட நிர்மலா சீதாராமன்..!

நான்காயிரம் ஆண்டு நாகரிகம் இருக்கக்கூடிய அதே தமிழ்நாட்டில் இவர்களைச் சேர்ந்தவர்கள் மார்ச் மாதம் 1989-ல் சட்ட சபையில் ஒரு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்தார்கள்.

திமுக எம்.பிகள் நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு கடும் எதிர்ப்பு சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தர்மேந்திர பிரதான்  தான் கூறிய அந்த வார்த்தையை திரும்ப்பபெற்றுக் கொள்வதாக கூறியி இருந்தார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில், தர்மேந்திர பிரதான், யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனது தாய் தமிழகத்தை சேர்ந்தவர். நான் தமிழ் மண்ணின் மைந்தன். தமிழர்களுக்கு பிரதமர் மோடி தீங்கீழைக்க மாட்டார். கனிமொழி எனது சகோதரி'' எனத் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில், நிர்மலா சீதாராமன், ''தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள். அவரை கொள்கைத் தலைவராக கொண்டாடுகிறீர்கள். உங்களது போராட்டம் அநாகரீகமானது என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.  இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாரமன், ''நான்காயிரம் வருடம் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் எங்களோடது. எங்களுக்கு அதைப்பற்றி நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டாம் என்கிற அர்த்தத்தில் பேசுகிறார்கள் திமுகவினர்.

இதையும் படிங்க: நாம் தமிழர் தம்பிக்கு அடிச்ச "ஜாக்பாட்"..! கடுப்பில் ஒரிஜினல் கட்சிக்காரர்கள்..!

நான்காயிரம் ஆண்டு நாகரிகம் இருக்கக்கூடிய அதே தமிழ்நாட்டில் இவர்களைச் சேர்ந்தவர்கள் மார்ச் மாதம் 1989-ல் சட்ட சபையில் ஒரு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்தார்கள். நாகரீகம், பெண்ணுரிமை, பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னவர்கள் ஜெயலலிதா அம்மையாரின் புடவையை பிடித்து சட்டசபையில் இழுத்தார்கள். இவர்கள் என்ன பேசுகிறார்கள் நாகரீகத்தைப் பற்றி.

4000 ஆண்டுகள் பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்ட நீங்கள் ஒரு பெண் தலைவரை சட்டசபையில் சேலையை பிடித்து இழுத்துள்ளீர்கள்.இதை ஒருத்தர் மட்டும் செய்யவில்லை. பல பேரும் சேர்ந்து இழுத்தார்கள். இதுதான் நாகரீகமா? இது தான் பண்பாடா? இதுதான் கலாச்சாரமா? நீங்கள் அதைப் பற்றி பேசலாமா? பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் மட்டும் கொடுத்தால் போதாது. பெண்களை அவமதிக்காமல் இருப்பது முக்கியம். அதை நீங்கள் செய்யவில்லை.

அதே மாதிரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகத்திற்குள்ளேயே மிக மோசமான பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி  ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் சிக்கியவர் ஒரு திமுககாரர்.அப்போது இந்த திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? அவளும் ஒரு பெண்தான். அது நாகரீகத்திற்கு எதிர்மறையாக இருக்கக்கூடிய விஷயம். ஆகையால் நீங்கள் யாருக்கு உபதேசம் செய்யாதீர்கள் என்று சொல்கிறீர்கள்.

மூன்றாவது அதுவும் ஒரு பெண். 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் திருச்சியில் பலியாக்கினார்கள். அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுதான் திராவிடம் மாடல் அரசியலில் பெண்களின் பாதுகாப்பா? 24 வயதை சேர்ந்த ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் தஞ்சாவூரில்... இதுதான் திராவிட மாடலில் அரசாங்கத்தின் பாதுகாப்பா? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தார்கள். அதில் என்ன நடவடிக்கை எடுத்தது உங்கள் திமுக அரசு?

 28 ஆணவ கொலைகள் நடந்துள்ளது. சமத்துவம் பற்றி நாங்கள் பாடம் எடுக்கிறோம், சமநிலையை போதிக்கிறோம்  என்கிறீர்கள். ஆனால், வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் நடுரோட்டில் வைத்து வெட்டுகிறார்கள். இதுதான் நீங்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யும் லட்சணமா?'' என பட்டியல் போட்டு திமுகவை வெளுத்துள்ளார் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
 

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையால் வட இந்தியாவுக்கு மட்டும் சாதகமா.? முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share